தெலங்கானாவில் பிரபல பேட்டரி ஆலை பணிகள் தொடங்கின
இந்தியாவில் பேட்டரி வாகனங்கள்தான் எதிர்காலம் என்ற பிம்பம் உருவாகியுள்ளது.இந்நிலையில் தெலங்கானாவில் வாகனங்களுக்கான பேட்டரி தயாரிக்கும் ஜிகா பேக்டரியை அமரராஜா பேட்டரீஸ் என்ற நிறுவனம் கடந்த சனிக்கிழமை அடிக்கல் நாட்டியுள்ளது. மகபூப்நகர் என்ற பகுதியில் இதற்கான ஆலை அமைகிறது. அந்த மாநில அரசு அண்மையில் லித்தியம் அயன் பேட்டரிகளை தயாரிக்கும் ஒப்பந்தத்தை அமரராஜா நிறுவனத்துடன் கையெழுத்திட்டது. 16 ஜிகாவாட் அளவு கொண்ட பேட்டரி செல்களையும்,5 ஜிகாவாட் அளவு கொண்ட பேட்டரிகளையும் இந்த ஆலை தயாரிக்கிறது. இந்த நிறுவனம் நேரடியாக 4,500 பேருக்கும் மறைமுகமாக 4,500 பேருக்கும் வேலைவாய்ப்பை அளிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. புதுப்புது தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் தெலங்கானா எப்போதும் முன்னிலையில் இருக்கின்றது. இந்த நிலையில் பூமி பூஜையுடன் ஆலை கட்டுமானப்பணிகள் தொடங்க இருப்பதால் அந்த மாநிலத்தில் நல்ல கணிசமான வேலைவாய்ப்புகளும், முதலீடுகளும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.