1 ஏக்கர் 1 கோடி!!!! வாரி குவித்த நிறுவனம்!!!
இந்தியாவில் இயங்கி வரும் முன்னணி நிறுவனங்களில் மிகப்பிரபலமாக கருதப்படுவது பாக்ஸ்கான் நிறுவனம். இந்த நிறுவனம் பெங்களுரு விமான நிலையம் அருகே 300 ஏக்கர் நிலத்தை வாங்கிப்போட்டுள்ளதாக லண்டன் பங்குச்சந்தை புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மொத்தம் 300 ஏக்கர் நிலத்தை வெறும் 300 கோடி ரூபாய்க்கு கர்நாடக அரசிடம் இருந்து பாக்ஸ்கான் ஹோன் ஹோய் நிறுவனம் வாங்கியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்துக்கு பொருட்களை அசம்பிள் செய்வதில் இந்த நிறுவனம்தான் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.மே 10ம் தேதி தேர்தல் முடிந்த அடுத்த நாளே இதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. கடந்த மார்ச் 20ம் தேதி இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. மொத்தம் 8ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதால் 50ஆயிரம் பேருக்கு இதன்மூலம் வேலைவாய்ப்பும் கிடைக்க இருக்கிறது. யானை என்ற திட்டத்தின் கீழ் இதற்கான பணிகள் நடக்கின்றன. தனது மின்சார பொருட்கள் உற்பத்தியை அதிகப்படுத்த பாக்ஸ்கான் நிறுவனம் கர்நாடக அரசுடன் இணைந்து தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பிட்ட இந்த ஆலை விரிவடையும்போது 1லட்சம் பேருக்கு இன்னும் கூடுதலாக வேலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலங்கானாவிலும் பாக்ஸ்கான் தனது பிரமாண்ட ஆலையை அமைக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் , பெங்களூருவில்தான் பெரிய ஆலை அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முதலீடுகளை ஈர்க்க தெலங்கானா அரசும் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொள்கிறது. தங்கள் மாநிலத்தில் பாக்ஸ்கான் ஆலையை அமைக்க தெலங்கானா மற்றும் கர்நாடக அரசாங்கங்கள் இடையே போட்டி நிலவியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது 300 ஏக்கர் ஆலையை பெங்களூருவில் அமைக்க இருக்கிறது.