32 % எகிறிய MANKIND பங்குகள்..
மருந்துத்துறையில் இந்தியாவில் தனி இடம் மேன்கைண்ட் நிறுவனத்துக்கு உள்ளது. குறிப்பிட்ட இந்த நிறுவனம் கடந்த 25முதல் 27ம் தேதி வரை ஆரம்ப பங்கு வெளியீட்டை செய்தது. 4ஆயிரத்து 300 கோடி ரூபாய் நிதி திரட்ட ஐபிஓ வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இந்த நிறுவன பங்குகள் துவக்கத்தில் ஆயிரத்து300 ரூபாய் என்ற அளவில்தான் வர்த்தகம் நடந்தது. பின்னர் 32 புள்ளி 2 விழுக்காடு அளவுக்கு உயர்ந்து ஒரு பங்கின் விலை ஆயிரத்து 430 ரூபாயாக ஏற்றம் பெற்றுள்ளது.இந்தாண்டு வெளியானதிலேயே மிகப்பெரியஐபிஓவாக மேன்கைன்ட் நிறுவன ஐபிஓ திகழ்ந்தது. 2020ம் ஆண்டு இதேபோல் கிளாண்ட் என்ற மருந்து நிறுவனம் தனது ஆரம்ப பங்கு வெளியீட்டில் 6,480 கோடி ரூபாய் நிதியை திரட்டியது. IPO வெளியிடுவதற்கு முன்பே ஆயிரத்து 298 கோடி ரூபாயை முதலீட்டாளர்களிடம் இருந்து மேன்கைன்ட் நிறுவனம் பெற்றிருந்தது.77 முதலீட்டாளர்களில் 44 உள்ளூர் பரஸ்பர நிதி நிறுவனங்களாகும். HDFC Mutual Fund, SBI Mutual Fund, and ICICI Pru MF உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த 44 முதலீட்டாளர்களில் இடம்பிடித்த முக்கியமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சம் உள்ளூர் விற்பனையில் இந்திய அளவில் 4-வது பெரிய மருந்து நிறுவனமாக மேன்கைன்ட் நிறுவனம் உள்ளது. பிரெகா நியூஸ், அன்வாண்டட் 72 உள்ளிட்ட கரு சார்ந்த பொருட்கள் விற்பனை இந்தியாவில் அமோகமாக உள்ளன.இந்த நிறுவனம் விற்கும் பொருட்களை வாங்குவதில் 98 விழுக்காடு மக்கள் இந்தியர்களாக இருக்கின்றனர் 2020 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் இந்திய மருத்துவத்துறை வளர்ச்சியே 11 விழுக்காடாகத்தான் இருந்தது. ஆனால் இந்தநிறுவனத்தின் வளர்ச்சி மட்டும் 16% என்ற அளவில் இருந்தது.