HDFC-HDFCbank இணைப்பு – வாடிக்கையாளர்களுக்கு என்ன மாற்றம் வரும்??
இந்தியாவின் பெரிய வீட்டுக்கடன் நிறுவனமான HDFCயும் ,மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான HDFCவங்கியும் வரும் ஜூன் மாதம் இணைய இருக்கின்றன.இந்த இரண்டு நிறுவனங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் என்னென்ன மாற்றங்களை சந்திப்பார்கள் என்பதை காணலாம். எச்டிஎப்சியில் 21 லட்சம் டெபாசிட் கணக்குகள் உள்ளன. வட்டி விகிதத்தை பொருத்தவரை எச்டிஎப்சி நிறுவனத்தில் டெபாசிட் செய்த தொகைக்கு அதன் வங்கி இனி குறைவான வட்டியைத்தான் தர இருக்கிறது.அதாவது உதாரணத்துக்கு 7.45 விழுக்காடு வட்டியை எச்டிஎப்சி தந்து வந்த நிலையில் இனி அது 7விழுக்காடாக குறையும். மூத்த குடிமக்களுக்கு எச்டிஎப்சி 0.25% கூடுதல் வட்டி அளித்த நிலையில் அதன் வங்கி இனி 0.50% வட்டி தர இருக்கிறது. 2 லட்சம் ரூபாய் வரையிலான முதலீட்டுக்கு மட்டும் பழைய FD கணக்கில் வந்த வட்டியைவிட இனி வட்டி குறைவாகத்தான் கிடைக்கும் என்பதால் அதனை எடுத்துவிடுவது நல்லது என்கிறார்கள் நிபுணர்கள். முதிர்வுக்கு முந்தய விதியில் மாற்றம்உள்ளிட்டவைும் மாற இருக்கின்றன. இந்த மாற்றங்களால் எச்டிஎப்சி வங்கியில் FD கணக்கு வைத்திருந்தோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பரவாயில்லை குறைவாகவே வட்டி வந்தால் போதும் என்று கருதும் வாடிக்கையாளர்கள் அப்படியே தொடரலாம் என்றும்,அது அவரவர் விருப்பம் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்