கேப்ல கெடா வெட்ட நினைக்கும் நிறுவனங்கள்..
இந்தியாவில் பிரபல விமான நிறுவனங்களில் ஒன்றாக கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் இருக்கிறது. பாதிக்கும் மேற்பட்ட விமானங்களில் இன்ஜின் கோளாறு சரி செய்யப்படாதததை அடுத்து இந்த நிறுவனம் அண்மையில் திவால் நோட்டீஸ் அளித்தது. இந்த நிறுவன திவால் நோட்டீஸ் வழக்கத்தைவிட வித்தியாமசாக இருந்தது. அதாவது எந்த பொருளை விற்கவேண்டும் என்று தங்கள் நிறுவனமே முடிவெடுக்கும் வகையில் இந்த நோட்டீஸ் இருந்தது இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமமான டாடா குழுமமும், இண்டிகோ விமான நிறுவனமும் கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் விற்பனைக்கு வரும் சொத்துகளை வாங்க தீவிரம் காட்டி வருகின்றன. கோஃபர்ஸ்ட் நிறுவனம் திவாலான நிலையில் அந்த நிறுவனத்துக்கு என இருந்த விமான நிறுத்துமிடங்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. இதனை டெல்லி மற்றும் மும்பையில் குறைந்த விலைக்கு வாங்க டாடா மற்றும் இண்டிகோ இடையே போட்டி நிலவுகிறது. இந்த விமான நிறுத்துமிடங்களை வாங்க ஆகாசா விமான நிறுவனமும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் மல்லையாவுக்கு என்ன நடந்ததோ அதே பாணியலான பிரச்சனை தற்போது கோஃபர்ஸ்ட் நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அதனை தீர்க்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் 36 விமானங்கள் தற்போது விற்பனைக்கு வர இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்ஜின் பழுது சரி செய்யப்படாமல் இழுக்கடிக்கப்பட்டதால் கோஃபர்ஸ்ட் நிறுவனம் திவாலாகும் சூழலுக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.