பிரச்சனை இன்னும் முடில…
உலகளவில் வங்கித்துறை பெரிய வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்த சரிவில் இருந்து பல நாடுகளும் மீண்டு வர முயன்று வருகின்றன. இந்த பிர்சசனையில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவை உள்ளன. இந்த நாடுகள் அடுத்து வங்கிகள் திவாலாகாமல் இருக்கு போதுமான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ஆனால் சர்வதேச நாணய நிதியமான ஐஎம்எஃப் அமைப்பின் மூத்த பொருளாதார நிபுணர் Pierre-Olivier Gourinchas அண்மையில் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் பிரச்னை இன்னும் முடியவில்லை என்றும் இனிதான் ஆரம்பமாக வாய்ப்புள்ளதாகவும் அதிர வைத்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியங்களில் இருக்கும் வங்கிகள் பிரச்சனைகளை சமாளிக்கும் அளவுக்கு எதிர்ப்பு திறனுடன் இல்லை என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். திவாலாகி போன வங்கிகள் பற்றி என்ன செய்யவேண்டும் என்ற தெளிவான கொள்கையே இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் அடுத்தடுத்து 4 வங்கிகள் டமாலென சரிந்து உலக பொருளாதாரத்தையே ஆட்டம் காண வைத்துள்ளனர். இந்த வங்கிகளை அமெரிக்க அரசு பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.நிலைமை இப்படி இருக்கையில்,சர்வதேச நாணய நிதியம் தனது எச்சரிக்கையை கூறி இருப்பது உலக பொருளாதாரத்தில் மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து நாடுகளில் அதிக பாதிப்பு அமெரிக்காவுக்குத்தான்,ஏனெனில் ஸ்விட்சர்லாந்தில் திவாலான வங்கியை மற்றொரு பெரிய நிறுவனம் வாங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.