பேடிஎம்மில் இருந்து பங்குகளை விற்ற பிரபல நிறுவனம்
soft bank என்ற நிறுவனம் பேடிஎம்மின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து முதலீடு செய்திருக்கும் ஒரு பிரபல நிறுவனமாகும்.இந்த நிலையில் ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் என்ற பேடிஎம்மின் தாய் நிறுவனத்தில் இருந்து 2 விழுக்காட்டுக்கும் அதிகமான பங்குகளை சாஃப்ட் பேங்க் விற்றுள்ளது. கடந்த பிப்ரவரியில் இருந்து மே 8ம் தேதி வரை மட்டும் 13,103,148 பங்குகளை சாஃப்ட்பேங்க் நிறுவனம் விற்றுள்ளது. செபியின் புதியவிதிக்கு இணங்கி இந்த விற்பனையை சாஃப்ட் பேங்க் செய்துள்ளது. இந்த பங்குகள் விற்றதன்மூலம் சாஃப்ட் பேங்க் நிறுவனத்துக்கு 120 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 விழுக்காடு பங்குகளை விற்றது போக பேடிஎம் நிறுவனத்தில் சாஃப்ட் பேங்க் பங்குகள் 11% உள்ளன.சரியாக சொல்ல வேண்டுமானால்,70,809,082பங்குகள் இன்னும் சாஃப்ட் பேங்க் வைத்துள்ளது. கடந்தாண்டு நவம்பரில் 4.5% பங்குகளை இதே நிறுவனம் பேடிஎம்மில் இருந்து எடுத்து விற்பனை செய்தது.இதன் மூலம் மட்டும் 1631 கோடி ரூபாய் லாபம் பதிவானது. கடந்த சில காலமாக பேடிஎம் நிறுவனம் பெரிய நஷ்டத்தில் இருந்து மிக விரைவாக மீண்டுள்ளது. அதாவது கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் மட்டும் மொத்த இழப்பு 168 கோடி ரூபாயாக இருந்தது. இது இதற்கு முந்தைய ஆண்டு 761 கோடி ரூபாயாக இருந்தது. பேடிஎம் நிறுவனம் கஷ்டத்தில் இருந்த போது, அந்நிறுவனத்துக்கு உதவிய பெரிய நிறுவனங்கள் தற்போது பேடிஎம் நல்ல நிலையில் வந்துகொண்டுருப்பதால் அதன் பங்குகளை விற்று வருகின்றனர்.