போக்ஸ்வாகன் ஆபீஸ்ல என்ன ஆச்சு தெரியுமா?
பிரபல ஜெர்மன் கார் நிறுவனமான போக்ஸ் வாகன் பெர்லினை தலைமையிடமாக கொண்டு கிட்டத் தட்ட 90 ஆண்டுகளாக பயணித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் கார்கள் ஜெர்மனி மட்டுமின்றி உலகளவில் மிகவும் பிரபலமானவையாக உளளன. இந்தியாவிலும் போக்ஸ்வாகன் கார்களுக்கு என தனியாக ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில் பெர்லினில் அந்த நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் அரங்குக்கு வெளியே சுற்றுச்சூழல் அர்வலர்கள் அணிவகுத்து நின்றதுடன் அந்த நிறுவனத்துக்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பினர். சுற்றுச்சூழலுக்கு பெரிய பாதிப்பை போக்ஸ்வாகன் நிறுவனம் செய்வதாகவும் ,சீனாவுடன் கைகோர்த்து உற்பத்தி ஆலையை சீனாவுக்கு கொண்டு செல்வதாகவும் முழக்கங்களை எழுப்பினர். சீனாவில் உள்ள உய்குர் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாகவும் சூழலியல் ஆர்வலர்கள் முழக்கமிட்டனர். அந்த நிறுவனத்தின் முதலாளியான 80 வயதான Wolfgang Porsche அமர்ந்திருந்தபோது, சில சூழலியல் ஆர்வலர்கள் அவர் மீது கேக்களை தூக்கி வீசி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர் பல்வேறு முறைகேடுகளில் போக்ஸ்வாகன் நிறுவனம் ஈடுபட்டு வருவதாகவும், சுதந்திரமான தணிக்கை தேவை என்றும் சூழலியல் ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இத்தனை கலவரங்களுக்கு மத்தியிலும் அந்த நிறுவனத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டம் நடைபெற்றது.தொடர்ந்து முதலீட்டாளர்களும் இந்த நிகழ்ச்சியில் பேசினர். தங்கள் வணிகத்தை எப்படி உயர்த்துவது என்பது குறித்துமட்டுமே பேச்சு அமைந்திருந்ததாக புகாரும் எழுந்துள்ளது. சீனாவில் தொடர்ந்து முதலீடுகள் அதிகரிக்கப்படும் என்றும் நிகழ்ச்சியில் முடிவு செய்யப்பட்டது. மிகப்பிரபலமான சொகுசு கார் நிறுவனம் சுற்றுச்சூழலை பாதிப்பதாக சூழலியல் ஆர்வலர்கள் நடத்திய முழக்கப்போராட்டம் உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.