பெரிய பிரச்சனை காத்திருக்கு !!!!
ஜே.பி. மார்கன் என்ற நிறுவனம் உலகளவில் பிரபலமானதாக வலம் வருகிறது. இந்த நிறுவனத்தின் சிஇஓ Jamie Dimon அண்மையில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அமெரிக்காவில் நிலைமை சரியில்லை என்றும், திடீரென அரசு வாங்கிய கடன்களால் சிக்கல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.வளர்ச்சி திட்டங்களுக்கு வாங்கிகடன் திரும்ப செலுத்த முடியாமல் போக அதிக வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுவதாகவும் ஜாமி தெரிவித்துள்ளார். இதனிடையே அமெரிக்க கருவூலத்தின் செயலாளர் ஜானட் எலன்,ஜாமி சொல்வதுபோல நடக்க வாய்ப்பே இல்லை என்றும், அவ்வாறு நடந்தால் அமெரிக்க பொருளாதாரமே சிதைந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார். இவ்வாறு ஜாமி கருத்து தெரிவிப்பது அமெரிக்கா மட்டுமின்றி உலகத்தையே அச்சமடைய வைத்திருப்பதாகவும், ஜாமியின் கருத்துபங்குச்சந்தைகளை பாதிக்கும் என்றும் ஜானட் எச்சரித்துள்ளார். ஆனால் போர்க்கால நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று ஜாமி திட்டவட்டமாக கூறுகிறார். இதனால் பெரிய பரபரப்பு அந்தநாட்டில் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் தற்போதுள்ள சிக்கல்கள் சீரடையாவிட்டால் முக்கியமான ஒப்பந்தங்கள், பிற நிறுவன ஒத்துழைப்புகள் கேள்விக்குறியாகும் என்றும் ஜாமி எச்சரித்துள்ளார். இது அமெரிக்கா மட்டுமின்றி ஒட்டுமொத்த உலக பொருளாதாரத்தையே பாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அமெரிக்காவில் அடுத்தடுத்த வங்கிகள் திவாலாவதால் ஜேபிமார்கன் நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைத்து ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புகளை கொட்டி வருகின்றனர்.அமெரிக்க அதிகாரிகள் ஜே.பி.மார்கன் நிறுவன கருத்துகளை செவிமடுக்கலாம் என்றும் நிபுணர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.