காபி கடையின் ஒரு மாத வருமானம் 4.5 கோடி ரூபாயா…
ஜீரோதா நிறுவனத்தின் முதலாளியான நிகில் காமத் என்பவர் இந்தியளவில் மிகவும் பிரபலமான இளம் தொழிலதிபராவார். இவர் அண்மையில் ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அதில் பிரபலங்களுடன் கலந்துரையாடலை நடத்தினார். அண்மையில் இந்த நிகழ்ச்சியில் ராமேஸ்வரம் காபி என்ற நிறுவனத்தை நிறுவிய திவ்யா ராகவேந்திர ராவ் என்பவரின் கலந்துரையாடல் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. 10க்கு 15 சதுரடி அளவு கொண்ட ஒரு சிறிய கடை தனது திறமையான காபி விற்பனை மூலம் மாதம் நான்கரை கோடி ரூபாய் வருமானம் ஈட்டுவதாக கூறி அனைவரையும் வியக்கவைத்தனர். திவ்யா கூறும்போது, இந்த கடையை அப்துல்கலாம் நினைவாக அவர் பிறந்த ஊர் பெயரிலேயே வைக்க நினைத்ததேன் என்றார். ஒவ்வொரு ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் எப்படி தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பது பற்றியும் பல்வேறு பிரபலங்கள் பேசினர். குறிப்பிட்ட ராமேஸ்வரம் காபி என்ற நிறுவனத்திற்கு ஒரு நாளைக்கு 7ஆயிரத்து 500 வாடிக்கையாளர்கள் வருவதாகவும் இதில் பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக காபி கிடைப்பதால் நல்ல வருவாய் ஈட்டி வருவதாகவும் திவ்யா கூறினார். ஜீரோதா நிறுவனரின் பாட்காஸ்டில் பல பிரபல நிறுவனங்களின் சிஇஓக்கள், நிறுவனர்கள் பங்கேற்றனர். அப்படி அந்த காபி கடையில் என்னதான் இருக்கிறது என்று பலரின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.