ரிசர்வ் வங்கி செம ஹாப்பி அண்ணாச்சி…
உலக நாடுகளை பாடாய் படுத்தி வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா போன்ற பெரிய வசதிபடைத்தை நாடுகளே தடுமாறி வருகின்றனர். ஆனால் இந்திய ரிசர்வ் வங்கி அடுத்தடுத்த சிக்கன மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் பணவீக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் விகிதம் 4.7 விழுக்காடாக குறைந்திருக்கிறது. இதனை சுட்டிக்காட்டி பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர்,ஏப்ரல் மாத பணவீக்கம் மிகவும் திருப்திகரமாக இருப்பதாக கூறினார். நாம் சரியான பாதையில்தான் செல்கிறோம் என்பதை இந்த புள்ளிவிவரங்கள் தருவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் கூறியுள்ளார். விலைவாசி கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதால் வரும் காலங்களில் வட்டி விகிதங்களை குறைக்க வாய்ப்புள்ளதா என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார். தனியார் முதலீடுகள்,ஸ்டீல், சிமென்ட்,பெட்ரோ கெமிக்கல் ஆகிய துறைகளில் அதிகரித்துள்ளதாகவும், இந்த புள்ளிவிவரங்களை ஆராய்ந்து மேம்படுத்த வேண்டியுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்தியாவின் வளர்ச்சி 6.5விழுக்காடாக இருந்தால் உலகத்துக்கு 15விழுக்காடு வளர்ச்சியை இந்தியா தரும் என்றும் இது பெரிய வளர்ச்சி இல்லை என்றும் தெரிவித்துள்ளார். தொழில்நுட்பங்கள் அடிப்படையிலான தரவுகள் ஆராயவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.