அமெரிக்க அரசுக்கு வந்த சோதனை
உலகில் கடன் இல்லாத நபரே இல்லை என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. வல்லரசு நாடான அமெரிக்காவே கடன் சுமையில் சிக்கித்தவிக்கிறது. வளர்ச்சிப் பணிகள் மற்றும் அரசாங்கத்தை நடத்த வாங்கிய கடனை முதன்முறையாக திருப்பி செலுத்த முடியாத அளவுக்கு செலவு அதிகரித்துள்ளதாக அமெரிக்க அரசு கூறியுள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட விதியில் மற்றம் தேவை என்று ஆளும் அமெரிக்க அரசாங்கம் கூறி வருகிறது. அந்தநாட்டு விதிப்படி 31.4 டிரில்லியன் அமெரிக்க டாலர் வரை மட்டுமே அரசாங்கத்தால் கடன் வாங்க இயலும், அந்த அளவு ஏற்கனவே எட்டிவிட்டது. மேலும் தங்கள் கடன் உச்சவரம்பை அதிகரிக்க ஆளும் பைடன் அரசாங்கம் முயற்சித்து வருகிறது. இந்த நிலையில் கடன் உச்சவரம்பை அதிகரிக்க அனைத்து எம்பிகளின் உதவியையும் ஆளுங்கட்சி நாடியுள்ளது. இரண்டாவது முறையாக அமெரிக்க நிதியமைச்சர் ஜானெட் எலன் அனைத்து அமைச்சர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.அதில் இந்த பிரச்சனையை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் வரும் ஜூன் 1ம் தேதிக்குள்ளாகவே அமெரிக்க அரசுக்கு போதிய நிதி இல்லாத சூழல் ஏற்படும் என்பதை ஜானட் தெளிவுபட கூறியுள்ளார். இதனால் விரைவில் கடன் உச்சவரம்பு மாற்றி அமைக்கப்படவேண்டியது அவசியம் என்றும்,ஆதரவு நல்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அமெரிக்காவே சிக்கலில் உள்ள சூழலில் அந்நாட்டு எதிர்க்கட்சி எம்பிகள் இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்து வருகின்றனர். அமெரிக்க அதிபரின் ஜப்பான் பயணமும் நிலைமையை சிக்கலாக்கியுள்ளது. அவர் இருந்தால் அனைத்து தரப்பையும் அழைத்துப்பேசி முடிவு எடுக்க இயலும் என்றும் கூறப்படுகிறது. அவர் ஜி7 மாநாட்டுக்கு செல்வதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் அமெரிக்காவில் கடும் பரபரப்பு உண்டாகியுள்ளது.