நாட்டாம நீங்கதான் தீர்ப்பு சொல்லணும் !!!!
கோ ஏர் என்ற நிறுவனம் இந்தியாவில் கோ ஃபர்ஸ்ட் என்ற பெயரில் விமான சேவைகளை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் அண்மையில் திவால் நோட்டீஸ் அளித்து உலக கவனத்தை திரும்பிப்பார்க்க வைத்தது. இந்த விமான நிறுவனத்தின் இத்தகைய சூழலுக்கு பிராட் அண்ட் விட்னி என்ற நிறுவனம்தான் காரணம் என்று கோஃபர்ஸ்ட் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக டெலவேர் என்ற இடத்தில் நீதிமன்றத்தில் இருதரப்பும் வழக்குகளை நீதிமன்றத்தில் மனுக்களாக தாக்கல் செய்துள்ளனர். கொடுக்கும்போதே நல்ல இன்ஜின்களை பிராட் நிறுவனம் தரவில்லை என்றும், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கையை எடுக்கத்தவறியதால்தான் தங்கள் நிறுவனம் மிகப்பெரிய சிக்கலை சந்தித்திருப்பதாகவும், இடைக்கால நிவாரணமாக கோ ஏர் நிறுவனத்துக்கு இன்ஜின்களை தர வேண்டும் என்றும் கோஃப்ர்ஸ்ட் வாதிட்டுள்ளது. ஆனால் தங்கள் நிறுவனத்தில் எந்த பிரச்னையும் தரவில்லை என்று பிராட் நிறுவனமும் வாதிட்டுள்ளது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இறுதி தீர்ப்பை தரவில்லை. எனினும், இடைக்கால நிவாரணம் தரவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுறது. எனவே கோஃபர்ஸ்ட் நிறுவனத்தின் செயல்பாடுகள் மீண்டும் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.