AMAZONல பொருட்கள் வாங்குவீங்களா? ஒரு நிமிடம்!!!!
உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், தனது இந்திய பிரிவில் விற்பனையாளர்களுக்கான கமிஷன் தொகையை உயர்த்தியுள்ளது, இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் இனி அதிக தொகை கொடுத்து பொருட்களை வாங்க வேண்டியிருக்கும்.அழகுசாதன பொருட்கள்,மளிகை,மருந்து மற்றும் ஆட்டோமொபைல் போன்ற சாதனங்கள் இதனால் விலை உயரப்போகிறது. ஆன்லைனில் பொருட்களை வாங்கும்போது விதிக்கப்படும் 18விழுக்காடு ஜிஎஸ்டி ஒருபக்கம் வாடிக்கையாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்திய சூழலில், தற்போது மேலும் கூடுதல் சுமை மக்கள் தலையில்விடிகிறது. மருந்து கடைகளில் மருத்துவர் சீட்டு இல்லாமல் விற்கப்படும் மருந்துகளின் விலை 5விழுக்காட்டில் இருந்து ஆன்லைனில் விற்கும்போது 12 விழுக்காடாக உயரப்போகிறது. இந்த புதிய விலை பட்டியல் என்பதுவரும் 31ஆம் தேதியில் இருந்து அமலாக இருக்கிறது.அழுகுசாதனம் மற்றும் அதுசார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்படும் பொருட்கள் ஆயிரம் ரூபாய்க்கு மேல் சென்றால் 9 விழுக்காடும், 500 ரூபாய்க்கு மேல் உள்ள ஸ்லீப்வியர் வகை உடைகளுக்கு 15 விழுக்காடு கூடுதல் தொகையும் செலுத்த வேண்டியிருக்கும். உள்ளாடை,கவர்ச்சிகரமான ஆடைகள்,அது சார்ந்த பொருட்களின் விலையும் அமேசானில் உயர்த்தப்பட இருக்கிறது. 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பொருட்கள் திரும்பப்பெறப்படும்போது அதற்கான தொகையும் உயர்த்தி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.