விண்ட்ஃபால் டேக்ஸ் முற்றிலும் பூஜ்ஜியம்!!!
கச்சா எண்ணெய் மீது மத்திய அரசு விதித்த விண்ட்ஃபால் டாக்ஸ் என்ற வரி முழுமையாக நிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்பாக ஒரு டன் கச்சா எண்ணெய்க்கு இந்திய மதிப்பில் 4 ஆயிரத்து 100 ரூபாய் விண்ட்பால் வரியாக மத்திய அரசு விதித்திருந்தது. சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு தகுந்தபடி இந்த வரியானது ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒருமுறை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. முதலில் இந்த தொகை 6 ஆயிரத்து 400 ரூபாயாக ஒரு டன்னுக்கு இருந்தது. இப்போது இந்த வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த விண்ட்ஃபால் டேக்ஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த வரி முறை அமல்படுத்த முக்கிய காரணமே ரஷ்யா-உக்ரைன் போரின் போது எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட சரிவுதான். இந்தியாவில் கடந்த 360 நாட்களாக கச்சா எண்ணெய் விலையில் பெரிய மாற்றமின்றி பொதுமக்களுக்கு பெட்ரோல், டீசல் விலை விற்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விண்ட்பால் டாக்ஸ் முற்றிலும் பூஜ்ஜியமாக்கப்பட்டுள்ளதால் விலை உயராது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.