அடுத்த பெரிய ஆப்புக்கு தயாராகும் அமெரிக்கா..
அமெரிக்கா வல்லரசு நாடுதான், ஆனால் அங்கேயும் கடன் இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. அந்தநாட்டு விதிப்படி அரசாங்கம் 31.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை கடன் வாங்கிக்கொள்ளலாம் ஆனால் அந்தஅளவை அமெரிக்கா எப்போதோ எட்டிவிட்டது. வரும் 1ம் தேதிக்குள் இந்த கடன் வரம்பை உயர்தாவிட்டால் அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக ஒரு அரசாங்கம் கடனை திரும்ப செலுத்த முடியாமல் போகும் நிலை ஏற்படும். இதனை சரிசெய்ய ஜோ பைடன் தலைமையிலான அரசாங்கம் முயற்சிகளை செய்து வருகிறது. கடந்த 2008-ல் அமெரிக்க அரசின் கடன்9.49 டிரில்லியன் அளவு இருந்தது. கடந்த 15 ஆண்டுகளில் இந்த கடன் அளவு 31.4 டிரில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. 2008-ல் ஜிடிபிக்கு நிகரான கடன் 63.85 விழுக்காடாக இந்தது. இது தற்போது 120 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. வரும் 1ஆம் தேதிக்குள் அமெரிக்கா இந்த பிரச்சனையை சரி செய்யவில்லை என்றால் மீண்டும் 2008ஆம் ஆண்டு இருந்ததைப்போல மிகமோசமான பொருளாதார மந்தநிலை வரும் என்றும், நிறுவனங்கள் கொத்துக்கொத்தாக வேலை ஆட்களை நீக்குவார்கள் என்றும் அஞ்சப்படுகிறது. இதனை ஒரே ஒரு நாடாளுமன்ற கூட்டத்தில் சரி செய்துவிட முடியும் ஆனால் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினர் இடையே ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இது சாத்தியம் என்பதால் இது வரும் 1ஆம் தேதிக்குள் முடியாது என்றே நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அமெரிக்க வரலாற்றிலேயே மிகமோசமான அதிபர் என்ற பெயரை பைடன் பெறப்போகிறாரா, இல்லை பிரச்சனையை சமாளிப்பாரா என்பதை உலகமே உற்று நோக்கி வருகிறது. ஒருவேளை அமெரிக்க அமைச்சர்கள் கூட்டம் நடைபெற இசைவு தெரிவிக்காவிட்டால் , மிக மோசமான பாதிப்புகளை சந்திக்க நேரிடம் இதன் பாதிப்பு நிச்சயம் இந்தியாவிலும் கூட காணப்படும்.