வெறுத்துப்போன வோடஃபோன் !!!
ஒரு காலகட்டத்தில் மிகப்பெரிய சிம்கார்டு நிறுவனமாக வலம் வந்தது வோடஃபோன் நிறுவனம்.இந்த நிறுவனத்துடன் ஐடியா நிறுவனமும் இணைந்து வி என்ற பெயரில் இந்தியாவில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. இந்நிலையில் வோடஃபோன் குழுமம் தனது இந்திய பிரிவு வணிகமான வோடபோன் ஐடியா நிறுவனத்தின் மதிப்பை பூஜ்ஜியமாக அறிவித்துள்ளது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு கடன்களை வோடஃபோன் நிறுவனம் தாங்கிக்கொண்டுள்ளது. 2017ஆண் ஆண்டு முதல் கூட்டாக பயணிக்கும் இந்த நிறுவனத்தில் இழப்பு ஏற்படும்போது வோடஃபோன் குழுமத்தில் இருந்து நிதி வந்துள்ளது. ஒரு கட்டத்துக்கு மேல் அதிக கடன் பாரம் ஏறியதால் வோடபோன் குழுமம் வி நிறுவனத்துக்கு பணம் தருவதை நிறுத்திக்கொண்டுள்ளது. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளதுபோல லாபம் பதிவானால் மட்டுமே பணம் தர முடியும் என்ற சூழலில் வோடபோன் நிறுவனம் இதுவரை கூட்டு நிறுவனத்துக்கு பணத்தை தரவில்லை. இந்த கூட்டு நிறுவனத்தின் கடன் 6 ஆயிரத்து 400 கோடி ரூபாயாக உள்ளது. 31மார்ச் 2021 அன்று ஆயிரத்து 900 கோடி ரூபாய் வி நிறுவனத்தின் கடனுக்காக வோடபோன் நிறுவனம் அளி்த்துள்ளது.கடன்களை திருப்பி செலுத்த இயலாத வோடஃபோன் நிறுவனத்தின் பங்குகளில் 33.3 விழுக்காடு பங்குகளை அரசாங்கம் எடுத்துக் கொண்டுள்ளதுடன், பங்குச்சந்தையில் விற்கவும் முற்பட்டது. புதிய தகவல்களால் வோடஃபோன் நிறுவன பங்குகள் 3.67 விழுக்காடு அதிகரித்து 7 ரூபாய்35 காசுகளாக உள்ளது. தொடரும் நிர்வாக சிக்கல்களால் வோடஃபோன் வாடிக்காயாளர்களை ஜியோ மற்றும் ஏர்டெலுக்கு வோடஃபோன் இழந்து வருவது குறிப்பிட வேண்டிய அம்சமாகும்.