மூன்றாவது நாளாக சரிந்த பங்குச்சந்தைகள்
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3-வது நாளாக சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 129 புள்ளிகள் சரிந்து 61ஆயிரத்து431 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 52 புள்ளிகள் சரிந்து 18 ஆயிரத்து 130 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது. உலகளவில் நிகழும் மாற்றங்களால் ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்,பாதியில் லாபத்தை பதிவு செய்யும் பக்கம் சென்றது.கடைசி நேரத்தில் பங்குச்சந்தைகள் கடுமையாக சரிந்தன.Divis Laboratories, Adani Ports, SBI, ITC, டைட்டன் கம்பெனி உள்ளிட்ட பங்குகள் வீழ்ச்சியடைந்தன.Bajaj Finance, Kotak Mahindra Bank, Bharti Airtel, ICICI Bank,Asian Paintsஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன.வங்கித்துறையைத் தவிர்த்து மற்ற அனைத்துத்துறை பங்குகளும் கடுமையாக வீழ்ந்தன.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் சரிந்து 45200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 20 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 650 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து 78 ரூபாய்10காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்து 78 ஆயிரத்து100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை மேலே குறிப்பிட்டுள்ளதுடன் 3 விழுக்காடுஜிஎஸ்டி மற்றும் செய்கூலி சேதாரம் சேர்ந்தால்தான் முழுமையான விலை என்று பொருள். கடைக்கு கடை செய்கூலி,சேதாரம் மாறுபடும் என்பதையும் நகை வாங்கும்போது கவனத்தில் கொள்வது நல்லது. நண்பன் கூட உதவாத நேரத்தில் தங்கம் உதவும்…