எல்ஐசி பாலிசி வச்சிருக்கீங்களா இத கவனியுங்க…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியில் ஆண்டுக்கு ஆண்டு வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் சந்தா தொகை இம்முறை 30 விழுக்காடு சரிந்துள்ளது இதனை அந்நிறுவனமே உறுதிசெய்துள்ளது.பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தின் பிரீமியம் செலுத்தும் அளவு குறைந்துள்ள அதே நேரம் தனியார் காப்பீட்டு நிறுவனங்களில் 8.5% கணிசமாக உயர்ந்திருப்பதாக அதிகாரபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஏப்ரல் 2022-ல் 17,939 கோடி ரூபாய் அளவுக்கு பிரீமியம் கிடைத்து வந்த நிலையில் இது இந்தாண்டு ஏப்ரலில் 12,565 கோடி ரூபாயாக சரிந்துள்ளது மார்ச் மாத பிரீமியம் தொகையைவிட கடந்த ஏப்ரல் பிரீமியம் தொகை 76 விழுக்காடு குறைந்திருக்கிறது.இதற்கான காரணம் யாதெனில் முதலீட்டாளர்கள் வரிச்சலுகை பெற மார்ச் மாதத்திலேயே காப்பீடு அதிகளவில் எடுத்தது தான் என்கிறார்கள் நிபுணர்கள் எல்ஐசி காப்பீடு செலுத்துவோரின் எண்ணிக்கை சரிந்திருக்கும் இதே சூழலில் பாரத ஸ்டேட் வங்கியின் காப்பீடு 8 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. hdfc 3.24% உயர்வும், ICICI PRudential வளர்த்சி 17 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது.மத்திய பட்ஜெட்டில் வரிச்சலுகைக்கான அளவு மாற்றப்பட்டதே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. புதிதாக செய்யப்பட்ட மாற்றங்களின் தாக்கம் இந்த நிதியாண்டின் இரண்டாவது பாதியில்தான் தெரியும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.