டெஸ்லாவுக்கு சலுகைகள் தர இதெல்லாம் வேண்டுமாம்..
அமெரிக்க பிரபல நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் தனது உற்பத்தி ஆலைகளை தொடங்க பல்வேறு கட்ட முயற்சிகளை செய்து வருகிறது. இது குறித்து பேச அந்நிறுவன அதிகாரிகள் இந்திய பிரதமர் அலுவலக அதிகாரிகளையும் சந்தித்து பேச திட்டமிட்டனர். இந்த நிலையில், டெஸ்லா நிறுவனத்துக்கு சில சலுகைகளை அளிக்க வேண்டுமானால்,குறிப்பாக இறக்குமதி வரியில் சலுகைகள் அளிக்கப்பட வேண்டுமானால் இவற்றையெல்லாம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு விதிகளை வகுத்துள்ளது. அதாவது உள்ளூரிலேயே கார் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டும், குறிப்பிட்ட டெஸ்லா நிறுவனம் 40விழிக்காடு உற்பத்தி வரியில் 40விழுக்காடு வரை சலுகைகள் கேட்டுள்ளதாகவும் 40 ஆயிரம் டாலருக்கும் அதிகமான கார்களுக்கு இறக்குமதி வரியில் 100 விழுக்காடு சலுகையையும் அந்த நிறுவனம் கேட்டுள்ளது. மேலும் அதற்கு குறைவான தொகை கொண்ட கார்களுக்கும் சலுகைகள் கேட்டதாக மத்திய அமைச்சர் கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
தங்கள் நிறுவனத்தின் காரை மின்சாரகார்கள் வகையில் பார்க்கவேண்டும் என்று கேட்டுள்ள டெஸ்லா நிறுவனம், தங்கள் நிறுவன கார்கள் சொகுசு கார்கள் இல்லை என்றும் இந்திய அரசுக்கு தெரிவித்துள்ளனர். இந்தியாவில் உற்பத்தியாகும் கார்களைவிட வெளிநாடுகளில் இருந்து இறக்கப்படும் கார்களுக்கு பாரபட்சமின்றி மிக அதிக இறக்குமதி வரி உள்ளது. இதனை குறைக்க வேண்டும் என்று டெஸ்லா நிறுவன அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் தனது கார் விற்கும் திட்டத்தையே டெஸ்லா நிறுவனம் கைவிட இந்த இறக்குமதி வரி மிக முக்கிய காரணமாக உள்ளது நேரடியாக டெஸ்லாவுக்கே சலுகைகளை அளிக்காமல் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்கும்படி இந்திய அதிகாரிகள் டெஸ்லாவை கேட்டுக் கொண்டுள்ளனர். 2000ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் 2022 வரை 33.77 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வெளிநாட்டு நேரடி முதலீடுகள் இந்தியாவில் பெறப்பட்டுள்ளன. தற்போது நடைமுறையில் பிற கார் நிறுவனங்களுக்கு என்ன சலுகைகள் தரப்படுகிறதோ அவற்றை டெஸ்லாவுக்கும் தர மத்திய அரசு முயற்சித்து வருகிறது.