மின்சார ஸ்கூட்டர் மானியம் குறைப்பு
இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்கள் வாங்கினால் தற்போது வரை விற்பனை விலையில் 40விழுக்காடு மானியம் அரசு அளித்து வருகிறது. இதனை 15 விழுக்காடாக குறைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது.கனரகஆலைகள் அமைச்சகமான mhi இதற்கான பரிந்துரையை அரசுக்கு அனுப்பியுள்ளது.எனினும் இதுகுறித்து இறுதி முடிவை அமைச்சர்கள்தான் எடுக்க இருக்கின்றனர் 3 சக்கர மின்சார வாகனங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மானியம் பயன்படுத்தாமல் இருக்கும்போது அதனை எடுத்து இருசக்கர வாகன உற்பத்திக்கு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாதந்தோறும் மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனை, 45 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. தற்போது குறைக்கப்படும் மானியத்தால், பலருக்கும் மானியம் தர முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 10ஆயிரம் ரூபாய் ஒரு பைக்குக்கு fame திட்டம் வாயிலாக மானியமாக அளிக்கப்படுகிறது. அதே நேரம் குறைக்கப்படும் மானியத்தால் பலருக்கும் 3,500 கோடி ரூபாய் வரை மானியத்தை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் முன்பு இருந்ததை விட மின்சார இருசக்கர வாகனத்தின் விற்பனை அளவு கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் திடீரென மானியம் குறைக்கப்பட இருப்பதாக வெளியான தகவல் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.