பெரிய லாபகரமான நிறுவனம் எது தெரியுமா???
இந்தியாவில் மிகவும் லாபகரமான நிறுவனங்களின் பட்டியலில் எப்போதும் ரிலையன்ஸ் குழுமம் முதலிடத்தில் இருக்கிறது. இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தது யார் தெரியுமா, பாரத ஸ்டேட் வங்கிதான், 2023 நிதியாண்டு நிலவரப்படி, கடந்த 3 ஆண்டுகளில் 41 விழுக்காடு கூட்டு வளர்ச்சி பெற்றுள்ளது பாரத ஸ்டேட் வங்கி, 2022-23 நிதியாண்டில் மட்டும் அந்த நிறுவனத்தின் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி 57 விழுக்காடு அதிகரித்துள்ளது, நிகர லாபமாக 55,648 கோடி ரூபாய் இந்த வங்கிக்கு கிடைத்திருக்கிறது. பாரத ஸ்டேட் வங்கி அனைத்து தரப்பினருக்கும் கடன் அளிக்கும் அளவு கணிசமாக அதிகரித்துள்ளதாக அந்த வங்கியின் தலைவர் தினேஷ் குமார் காரா தெரிவித்துள்ளார். வாராக்கடன்களின் அளவு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக்குறைவாக பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.கடந்த நிதியாண்டின் 3ஆவது காலாண்டில் வாராக்கடன் அளவு 3.14விழுக்காட்டில் இருந்தது. இது மார்ச்சுடன் முடிந்த காலாண்டில் 2.78 விழுக்காடாக குறைந்திருக்கிறது. கடந்த 2016 நிதியாண்டில் இருந்து ரிலையன்ஸ் குழுமம்தான் இந்த பட்டியலில் முதலிடத்தில் தொடர்கிறது. ரிலையன்ஸ்,பாரத ஸ்டேட் வங்கி இல்லாமல் அடுத்தடுத்த இடங்களில் டிசிஎஸ், எச்டிஎப்சி,ஓஎன்ஜிசி, ஐஓசி உள்ளிட்ட நிறுவனங்கள் பிடித்துள்ளன. பாரத ஸ்டேட் வங்கியின் பங்குகளின் மதிப்பு கடந்த 2021க்கு பிறகு கணிசமாக உயர்ந்து வருவது குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு அம்சமாக இருக்கிறது.