பிரிட்டன் பிரதமரின் செல்வம் சரிந்தது.!!!
பிரிட்டனின் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் உள்ளார். பிரபல இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷதாவை இவர் திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இவர்களின் சொத்துமதிப்பு உலகளவில் பெரிய பேசுப்பொருளாக மாறியிருந்தது. இன்போசிஸ் நிறுவனத்தில் அக்ஷதாவுக்கு ஒருவிழுக்காடுக்கும் குறைவான பங்குகளே இருக்கின்றன. இதற்கே அவரின் சொத்துமதிப்பு கடந்தாண்டு 730மில்லியன் பவுண்ட் என்ற அளவில் இருந்தது. இந்த சொத்து மதிப்பு தற்போது 200 மில்லியன் டாலர் சரிந்துள்ளது. ஓராண்டில் இத்தனை சரிவை அவரின் சொத்துமதிப்பு சரிந்துள்ளது. ரிஷி சுனக் மற்றும் அவரின் மனைவியின் சொத்துமதிப்பு தற்போது 529 மில்லியன் டாலராக சரிந்துள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தின் வருங்காலம் கேள்விக்குறியாகும் அளவுக்கு கடந்த ஓராண்டில் அடுத்தடுத்த சரிவுகளை அந்நிறுவனம் சந்தித்துள்ளது. இதன் எதிரொலியாகவே அக்சதாவின் சொத்துமதிப்பு சரிந்துள்ளது. பிரிட்டனில் வசிக்கும் பணக்காரர்களின் பட்டியலும் கடந்தாண்டுகளைவிட குறைவாகவே பதிவாகியுள்ளது. கடந்த 14 ஆண்டுகளில் முதன்முறையாக செல்வந்தர்களின் பணம் குறைந்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. கொரோனா காலகட்டம், அதிகரித்து வரும் கடன்கள் மீதான வட்டி விகிதம்,சிறு முதலீட்டாளர்களின் பணம் திவாலானது ஆகிய காரணிகளால் பிரிட்டனில் பணக்காரர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது பெரிய டெக் நிறுவனங்களில் தங்கள் வாடிக்கையாளர்கள் குறைந்ததால் ஒரு மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவும் பிரிட்டனில் பெரும் பணக்காரர்கள் அளவு குறைந்திருக்கிறது.