ரூ.2000 நோட்டை மாற்ற என்ன தேவை?? .
மே 19ஆம் தேதி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 23ஆம் தேதியில் இருந்து பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து வங்கியில் வரவு வைக்கவும் இல்லை சில்லறையாக மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பாரத ஸ்டேட் வங்கி தனது அறிவிப்பை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது. அதன்படி பணத்தை மாற்றித்தர புதிய படிவம் ஏதும் நிரப்பத்தேவையில்லை என்றும், எந்த அடையாள அட்டைகளும் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரே நேரத்தில் 20ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதி வரை மட்டுமே இந்த பணத்தை மாற்ற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 30ஆம் தேதிக்கு பிறகும் 2 ஆயிரம் ரூபாய் மதிப்பு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 4 மாதங்கள் கால அவகாசம் இருக்கும் நிலையில் மக்களிடம் வெகு சில நோட்டுகள் மட்டுமே இருக்கும் என்பதால் எளிதில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப வந்துவிடும் என்று வங்கிகள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
கருப்பப்பணத்தை ஒழிக்க 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், எந்த அடையாள அட்டையும், எந்த காகிதமும் தேவையில்லை என்று பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு பரபரப்பாக பேசப்படுகிறது. இதன் நோக்கமே அடிபட்டு போய்விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது புதிய சர்ச்சையை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது.