அட்டகாசாமான தொடக்கத்தில் இந்திய சந்தைகள்!!!
இந்திய பங்குச்சந்தைகளில் வாரத்தின் முதல் வர்த்தக நாளில் பெரிய முன்னேற்றம் காணப்பட்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 234 புள்ளிகள் அதிகரித்து 61,963 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 111 புள்ளிகள் அதி்கரித்து 18,314 புள்ளிகளில் வர்த்தம் முடிந்தது.வங்கித்துறை பங்குகளைத் தவிர்த்து மற்ற அனைத்துத்துறை பங்குகளையும் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் வாங்கிக் குவித்தனர். இதனால் சந்தையில் பெரிய லாபம் காணப்பட்டது, அதானி என்டர்பிரைசர்ஸ்,அதானி போர்ட்ஸ்,அப்போலோ மருத்துவமனை உள்ளிட்ட நிறுவன பங்குகள் பெரிய லாபத்தை பதிவு செய்தன.நெஸ்ட்லே, ஹீரோ மோட்டோ கார்ப், ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் பெரிய சரிவை கண்டன. உலோகத்துறை பங்குகள் 3 விழுக்காடு வரை லாபத்தை பதிவு செய்தன.பங்குச்சந்தை இரண்டாவது நாளாக ஏற்றத்துடன் முடிந்தன. தங்கம் விலை கடந்த சனிக்கிழமை விலையை விட கிராமுக்கு 5 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 675 ரூபாயாகவும், 45 ஆயிரத்து 400 ரூபாயாகவும் இருந்தது. வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து 78 ரூபாய் 60 காசுகளாகவும், கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 400 ரூபாய் குறைந்து 78 ஆயிரத்து 600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலைகளுடன் தங்கத்துக்கு 3 விழுக்காடு ஜிஎஸ்டி மற்றும் செய்கூலி , சேர்க்க வேண்டும், ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு விலை செய்கூலி சேதாரம் இருக்கும் என்பதால் குறைவான செய்கூலி,சேதாரம் எந்த கடையில் இருக்கிறது என்பதை பார்த்து தங்கம் வாங்குவதே சிறந்த யோசனையாகும். இயன்றவரை உங்கள் பணத்தை தங்கமாக மாற்றுங்கள் ஆபத்து நேரத்தில் அது உங்களுக்கு நிச்சயம் உதவலாம்.