பரோட்டா சூரியாக மாறிய வாடிக்கையாளர்கள்!!!!
ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளிக்கிழமை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெற உள்ளதாக அறிவித்த நிலையில் அதனை எப்படியாவது கையில் இருந்து தள்ளிவிடவே பலரும் விரும்புகின்றனர். இதன் விளைவாக பலரும் தங்கத்தை வாங்கி குவிக்கத் தொடங்கியுள்ளனர். இதன்காரணமாக தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ளன. இன்னும் சிலரோ அதனை முதலீடாக மாற்ற பல்வேறு உத்திகளை கையாண்டுள்ளனர். இது இரண்டுமே இல்லாமல் திடீரென 72 விழுக்காடு பேர் 2ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து உணவு ஆர்டர் செய்துள்ளது தெரியவந்துள்ளது. திங்கட்கிழமை மட்டும் மொத்தம் 72விழுக்காடு மக்கள் தங்கள் பணத்தை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக தங்கள் டெலிவரி செய்யும் ஊழியர்களிடம் அளித்துள்ளதாக ஜொமாட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை சரமாரியாக அள்ளி வீசி, சாப்பிட்டதுதான் மிச்சம் என்று ஒரு கும்பல் ஆர்டர் செய்வதையே ஒரு வாடிக்கையாக மாற்றிக்கொண்டுள்ளனர். 2016-ல் பண மதிப்பிழப்பின் போது, அறிமுகப்படுத்தப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டு, கடந்த 2018-19 காலகட்டத்தில் 6 லட்சத்து 73 ஆயிரம் கோடி ரூபாயாக புழக்கத்தில் இருந்தது. இது கடந்த மார்ச் மாதம் வரை 3 லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பணப்புழக்கம் குறைந்துள்ளது. இது மொத்த அளவில் 10 விழுக்காடு மட்டுமே. கிடைத்த பணத்தை தின்றே தீர்த்துவிட முடிவெடுத்த கருப்புப்பணம் வைத்திருப்போர், தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு எதையாவது வாங்கித்தந்திருக்கலாம்.