பிரிட்டனில் இது நடக்காதாம் நிம்மதிடா சாமி..
நடப்பாண்டில் பிரிட்டனில் பொருளாதார மந்தநிலை இருக்காது என்று சர்வதேச நாணயநிதியமான IMF சொல்லியிருக்கிறது. பணவீக்கம்தான் உலகின் பல நாடுகளுக்கும் தற்போது ஏற்பட்டுள்ள பெரிய சவாலாக மாறியுள்ளது. இந்த சூழலில் பணவீக்கத்தை தடுக்க புதிய உத்திகளை பிரிட்டன் அரசாங்கம் செய்து வருகிறது. இதன் விளைவாக பணவீக்கம் கட்டுப்பட்டு வருகிறது. பிரிட்டனின் உள்நாட்டு உற்பத்தி என்பது 0.4விழுக்காடு இந்தாண்டு உயர்ந்திருக்கிறது.முன்பு கணித்த 0.3 விழுக்காடு சரிவில் இருந்து நேர் எதிராக நிலைமை முன்னேறியுள்ளதாக பிரிட்டன் அரசை நாணய நிதியம் பாராட்டியுள்ளது. எரிபொருள் விலை குறைந்து வருவதும், உலகளவில் இயல்புநிலை திரும்பி வருவதாலும் பிரிட்டனின் நிலை சற்று முன்னேறியுள்ளது. பி்ரிட்டனில் பணவீக்கம் 5 விழுக்காடு வரை இருக்கும் என்றும்,2025ஆம் ஆண்டு பணவீக்ககத்தை 2 விழுக்காட்டுக்குள் கொண்டுவர முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்நாட்டில் நிலவி வந்த தொழிலாளர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.முதலீடுகள் திரும்ப வருவதற்கான வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பிரிட்டன் வங்கியின் கடன் வாங்கும் அளவு மேலும் அதிகரித்து வரும் சூழலில் பணவீக்கம் சற்று குறைந்திருப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளது பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.