2000 ரூபாய் நோட்டு சர்ச்சை!!!
2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்பப்பெறுவதாக கடந்த 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பிறகு எங்கு சென்றாலும் 2 ஆயிரம் ரூபாயை பலர் அதிசயமாக பார்க்கின்றனர். இந்த நிலையில் ஆவணங்கள் இல்லாமல் யார் வேண்டுமானாலும்,எவ்வளவு பணம் வேண்டுமானாலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்றிக்கொள்ளலாம் என்றும் பாரத ஸ்டேட் வங்கி அறிவித்தது. இந்த திட்டத்தை எதிர்த்து பாஜக பிரமுகர் ஒருவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கு குமார் உபத்யாய் என்பவரால் தொடுக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி தரப்பினர், இது கடந்த காலங்களில் செய்ததைப் போல திரும்பப் பெறப்படும் என்று வாதிட்டார். இதனை கேட்ட நீதிபதிகளே, 2 தரப்புகளையும் ஆராய்ந்து தீர்ப்பளிக்க இருப்பதாக தெரிவித்தனர். எனினும் தீர்ப்பை மட்டும் ஒத்திவைத்தனர். சத்தீஷ் சந்திரா என்பவர் இந்த வழக்கை ஒத்திவைத்துள்ளார். இந்தியாவின் பல நகரங்களிலும் 2,000 ரூபாய் நோட்டுகளை வேறு மதிப்பு கொண்ட நோட்டுகளாக மாற்றும் பணி மே 23 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன. அதற்கு பிறகும் 2 ஆயரம் ரூபாய் நோட்டு செல்லும் என்றும் பாரத ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.