இந்திய சந்தைகளில் திடீர் சரிவு
இந்திய பங்குச்சந்தைகள் கடந்த 3 நாட்களாக நல்ல லாபத்தை பதிவு செய்து வந்த நிலையில் யார் கண்ணு பட்டுச்சோ என்பது போல டமாலென விழுந்துவிட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 208 புள்ளிகள் சரிந்தன.61773 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தையிலும் இதே நிலைதான்.62.50 புள்ளிகள் சரிந்த இந்திய தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 18ஆயிரத்து285 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.முதல் பாதியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய சந்தைகள் பிற்பாதியில் பெரிதாக வீழ்ந்தது.Adani Enterprises, Adani Ports, Tata Motors, HDFC Bank,ICICI Bank ஆகிய நிறுவனங்கள் சரிந்தன உலோகத்துறை பங்குகள் 1 விழுக்காடும்,வங்கித்துறை பங்குகள் அரை விழுக்காடும் வீழ்ந்தன.மருந்துத்துறை பங்குகள் 1விழுக்காடு உயர்ந்தன.ஆற்றல்துறை பங்குகள் 0.6%ஏற்றம் கண்டன.L&T Finance Holdings, Cummins India, Ceat, CG Power, Jindal Saw, Apollo Tyres, TVS Motor Company ஆகிய நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் பெற்றன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 45ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் தங்கம் 20 ரூபாய் உயர்ந்து 5ஆயிரத்து 665 ரூபாயாக இருந்தது.வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 77ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையானது. மேலே சொன்ன தங்கம் விலையுடன் 3விழுக்காடு ஜிஎஸ்டி மற்றும் செய்கூலி, சேதாரம் சேர்க்கவேண்டும்.அவ்வாறு சேர்க்கும்போது வருவதே உண்ணையான தங்கம் விலையாகும். ஜிஎஸ்டி நிலையாக 3விழுக்காடு இருக்கும், ஆனால் செய்கூலி,சேதாரம் கடைக்கு கடை மாறும் என்பதால் குறைந்த செய்கூலி சேதாரம் எங்கு உள்ளது என்பதை கண்டறிந்து நகைகளை வாங்குவது புத்திசாலித்தனமான ஐடியாவாகும்.