இருக்கா இல்லையா? வருமா வராதா?
உலகில் எங்கு திரும்பினாலும் பஞ்சப்பாட்டைத்தான் மக்கள் பாடி வருகின்றனர். வேலை இல்லை, வருமானம்போதவில்லை,அது இல்லை இது இல்லை என்று புலம்பிதான் வருகின்றனர். உண்மையில் அப்படி என்னதான் நிலை என்று ஆராய இந்தியாவில் இப்சாஸ்என்ற நிறுவனம் பலதரப்பட்ட மக்களிடம் கருத்துகளை கேட்டு வெளியிட்டிருக்கிறது
இதில் இந்தியாவில் 44விழுக்காடுமக்கள் ஆல்ரெடி இந்தியா மந்தநிலையில்தான் இருக்கிறது என்று தெரிவித்திருக்காங்க..25 %பேர் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்றும்,32%மக்கள் இந்தியாவில் மந்தநிலை குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளனர் உலகளவில் 49விழுக்காடு மக்கள் அவர்கள் நாடு மந்தநிலையை சந்தித்து இருக்கிறது என்று தெரிவித்துள்ளதாகவும் இப்சாஸ் அறிக்கை கூறுகிறது. ஹங்கேரி,ஜப்பான்,தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் இதேநிலைதானாம்,அமெரிக்கர்களும் இந்தியாவைப்போலவே 44% பேர் மந்தநிலை இருப்பதாக நம்புகின்றனர்.பிரிட்டனில் இந்த அளவு 46%ஆக இருக்கிறது ஆனால் ஆஸ்திரேலியா, நெதர்லாந்து,சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டில் பொருளாதார மந்தநிலை இல்லவே இல்லை என்று தெரிவித்துள்ளனர் இந்தியாவில் 20விழுக்காடு மக்கள் மட்டும்தான் தங்கள் நிதி சார்ந்த எந்த பிரச்னையும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.11விழுக்காடுமக்கள் ரொம்பவும் கஷ்டப்படுவதாக கூறியுள்ளனர் தங்களின் தற்போதைய அவல நிலைக்கு காரணமாக பணவீக்கம்,விலைவாசி உயர்வுதான் இருப்பதாக மக்கள் பரவலான கருத்துகளை தெரிவித்துள்ளனர் தென்னாப்ரிக்கா,அர்ஜென்டினா,சிங்கப்பூரிலும் இதேதான் முக்கிய காரணியாக கூறப்படுகிறது மொத்தம் 29 நாடுகளில் மார்ச் 24 முதல் ஏப்ரல் 7ஆம் தேதி வரை இந்த கருத்துக்கணிப்பு மக்களிடம் கேட்கப்பட்டது. 20ஆயிரத்து570 பேரிடம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.கனடா,இஸ்ரேல்,மலேசியா,தென்னாப்ரிகாகாவில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.