போர் உக்கிரமா நடந்துகிட்டு இருக்கு!!! இன்னும் முடியல!!
இந்தியாவில் பணவீக்கம் படாதபாடு படுத்தி எடுத்து வருதால் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ், திடீரென உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது போன்ற திடீர் நிகழ்வுகளால் உலகளவில் சிக்கல் நிலவுகிறது என்று அவர் கூறியுள்ளார். விலைவாசிக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை என்றார். எப்போதும் விழிப்புடன் இருக்கும்படி கூறிய சக்திகாந்ததாஸ், எல்நினோ விளைவு காரணமாக பல்வேறு இடங்களில் பாதிப்பு அதிகம் இருப்பதாக கூறினார். கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவின் நுகர்வோர் பணவீக்க அளவு 18 மாதங்களில் இல்லாத அளவாக 4.7%ஆக பதிவாகியுள்ளது இது கடந்த மார்ச் மாதத்தில் 5.66%ஆக இருந்தது.இந்த மாதம் விலைவாசி உயர்வு என்பது குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மே மாத்ததின் தரவுகள் வரும் ஜூன் மாதம் 12ஆம் தேதி தெரியவரும்.2021ஆம் ஆண்டில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 4.07%ஆக இருந்தது. கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் வாடிக்கையாளர்களின் பணவீக்கம் என்பது 8 ஆண்டுகளில் இல்லாத அளவாக 7.80%ஆக இருந்தது.
அடுத்தமுறை கூடும் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக்கூட்டத்தில் மீண்டும் கடன்கள் மீதான வட்டிவிகிதம் உயர வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்காமல் விலைவாசியை கட்டுப்படுத்துவே முதன்மை பணியாக கொண்டு ரிசர்வ் வங்கி செயல்பட்டு வருவதாகவும்,தேவைக்கு ஏற்ப செயல்படுவோம் என்றும் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.போதுமான பணப்புழக்கம் இருப்பதை ரிசர்வ் வங்கி உறுதி செய்யும் என்றும் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.