யாருக்கு அதிக லோன் கிடைக்கிறது.?
இந்தியா மாதிரியான ஒரு பெரிய சந்தையில் கடன் இல்லாத நபரை பார்ப்பது அரிதான ஒரு நிகழ்வாகும்.இந்த நிலையில் யாருக்கெல்லாம் எளிதாககடன்கிடைக்கிறது என்ற தரவுகள் நமக்கு கிடைத்திருக்கின்றன. தகுதிக்கு மீறி லோன் வாங்குவோருக்குத்தான் பெரிய தொகையை கடனாக தர நிறுவனங்கள் விரும்புகின்றன. கடன்கள் மீதான வட்டி விகிதம் கடந்தாண்டு மே மாதத்தில் இருந்து கிட்டத்தட்ட இரண்டரை விழுக்காடு உயர்ந்துள்ள போதிலும் கார்பரேட் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது தொடர்ந்து அதிகரித்துள்ளது. சாதாரண பொதுமக்களும்,சிறு குறு நிறுவனங்களும் கடன் வாங்கினால்EBLR என்ற விதிப்படி அதிக வட்டி வசூலிக்கப்படுகிறது. இதேபோல் கார்பரேட் நிறுவனங்கள் கடன் வாங்கினால் அது MCLRதொடர்புடைய பிரிவில் கடன்கள் பெற முடியும் சிறு கடன்களுக்கு அதிக வட்டியும், பெரிய கடன்களுக்கு குறைவான அளவு வட்டி கட்ட நிறுவனங்கள் கோருவதாகவும் கூறப்படுகிறது. உதாரணமாக ரீட்டெயில் லோன் இருந்தால் போதும் அதற்கு 6 %வரியும்,வட்டியும் உள்ளது. இதுவே கார்பரேட் நிறுவனங்களுக்கு 2 விழுக்காடு மட்டுமே வரி,பாரத ஸ்டேட் வங்கியின் தரவுகளின்படி, தனிநபர் கடன்கள் 24 விழுக்காடும், கார்பரேட் கடன்கள் 42 விழுக்காடாக இருக்கிறது. இது இந்தியர்களைின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்தது. வருங்காலங்களில் வரிகளின் விகிதம் அதிகரித்தால் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த நேரிடம் இதேபாணியில் கடன் விகித அளவுகளும் அமைக்கப்பட இருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.