எங்களுக்கு போட்டி ஒரே ஒருத்தன் தான்!!!
ஃபோர்ட் நிறுவனம் என்பது உலகளவில் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த நிறுவனத்தின் கார்களுக்கு என்று உலகம் முழுவதும் ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இந்த நிலையில், அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜிம் ஃபார்லி அண்மையில் மார்கன் ஸ்டான்லி தற்சார்பு பொருளாதார உச்சிமாநாட்டில் பங்கேற்று பேசினார். அப்போது பேசிய ஜிம், உலகளவில் தங்களுக்கு போட்டியாக சீன கார் நிறுவனங்கள்தான் இருக்கின்றன என்றார். ஜெனரல் மோட்டார்ஸோ, டொயோட்டோவோ தங்களுக்கு போட்டியாளராக தாம் கருதவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகளவில் மிகவும் குறைந்த விலைக்கு கார்களை உற்பத்தி செய்வதில் சீனர்கள் வல்லவர்கள் என்று குறிப்பிட்டுள்ள ஜிம், byd, geely, great wall chengan ஆகிய நிறுவனங்கள் மலிவு விலையில் மின்சார கார்களை உற்பத்தி செய்வதில் வல்லவர்கள் என்று புகழ்ந்துள்ளார். சீனர்களிடம் இருந்து தனித்து தெரிவதற்கு தங்கள் நிறுவன பிராண்டிங்கை வலுவாக்க வேண்டும் என்றும் ஜிம் கூறியுள்ளார். ஐரோப்பியர்களை விட 5 மடங்கு அதிக உற்பத்தியை சீனா தரும்போது எப்படி போட்டியில் நிற்கமுடியும் என்றும் அவர் நியாயமான கேள்வியை எழுப்பியுள்ளார். மிச்சிகன் பகுதியில் சீன நிறுவனமான CATL உதவியுடன் ஒரு பெரிய கார் ஆலையை தொடங்க இருப்பதாக ஃபோர்ட் நிறுவனம் கூறியுள்ளது.3.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இதற்காக ஃபோர்ட் நிறுவனம் முதலீடு செய்ய இருக்கிறது. அண்மையில்தான் சீனாவுக்கு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவன அதிகாரிகள், எப்படி மலிவு விலைக்கு சீனர்களால் கார் தயாரித்து விற்க முடிகிறது என்று வியந்து போனார்கள். அண்மையில் எலான் மஸ்கும் இதே வியப்பை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் சீனர்கள் கடினமாகவும் ஸ்மார்ட்டாகவும் வேலை செய்வதாகவும் மஸ்க் புகழ்ந்திருந்தார். ஏற்கனவே எலான் மஸ்க்கின் பிரதான கார் தயாரிப்பு ஆலை சீனாவில் இருப்பது குறிப்பிடத்தக்கது