பாரத ஸ்டேட் வங்கிக்கே அபராதமா ?
கிரெடிட் கார்டு வேண்டாம் வேண்டாம் என்று தலைப்பாடாக அடித்துக் கொள்ளும் நிபுணர்களின் கூற்றுக்கு சான்றாக அமைந்திருக்கிறது டெல்லியில் ஒரு சம்பவம். ஆண்டனி என்பவர் பத்திரிகைத்துறையில் பணியாற்றி வந்தார். அவர் கடந்த 2016ஆம் ஆண்டே தனக்கு வழங்கப்பட்ட கிரிடிட் கார்டை வேண்டாம் என்று கூறி விண்ணப்பித்ததுடன் அந்த கார்டை உடைத்து தூக்கி வீசிவிட்டார்.அவர் வங்கி செலுத்த வேண்டிய தொகை 0 ஆகத்தான் இருந்தது. இந்த சூழலில் கடந்த 2017ஆம் ஆண்டு ஆண்டனிக்கு பாரத ஸ்டேட் வங்கியிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. அதில் 2,946 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும் தவறும்பட்சத்தில் மோசடி செய்வதவர்கள் பட்டியலில் உங்கள் பெயரையும் சேர்ப்போம் என்று வந்தது. இது பற்றி முறையிட்டும் ஆண்டனிக்கு எந்த உரிய விளக்கமும் கிடைக்கவில்லை. இதையடுத்து வாடிக்கையாளர் குறைதீர்ப்பு அமைப்பில் ஆண்டனி முறையிட்டு வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். அதில் நடந்த விவரங்களை படிப்படியாக அழகாக பட்டியலிட்டார். இதனால் வியந்து போன வாடிக்கையாளர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு அதிகாரிகள் பாரத ஸ்டேட் வங்கிக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதில் வாடிக்கையாளரின் எந்த தவறும் இல்லை என்றும், அவருக்கு உரிய நேரத்தில் இழப்பீடு வழங்கவில்லை என்றால் 3 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும் என்றும் ஆணையிட்டுள்ளனர்.
இந்த வழக்கு நடந்து வந்தபோது, தாங்கள் வாடிக்கையாளர் ஆண்டனியிடம் கடுமையாக நடந்துகொள்ளவே இல்லை என்றும் பாரத ஸ்டேட் வங்கி தரப்பு பம்மியது.