அட்டகாசமாக உயர்ந்த இந்திய சந்தைகள்!!!
இந்திய பங்குச்சந்தைகள் மே 26ஆம் தேதி பெரிய உயர்வுடன் வணிகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 629 புள்ளிகள் உயர்ந்து 62501 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 178 புள்ளிகள் அதிகரித்து 18ஆயிரத்து499 புள்ளிகளாகவும் வர்த்தகத்தை நிறைவு செய்தன. ரிலையன்ஸ் நிறுவன பங்குகளை அநேகம் பேரும் வாங்கிக்குவித்ததே இந்த பங்குச்சந்தை ஏற்றத்துக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. Reliance Industries, Sun Pharma, Divis Labs, HUL ஆகிய நிறுவனங்கள் பெரிய லாபத்தை பதிவு செய்தன. ONGC, Grasim Industries, Bajaj Auto, Bharti Airtel நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன. உலோகம், வீட்டு உபயோக பொருட்கள், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் தலா ஒரு விழுக்காடு வளர்ச்சி இருந்தது. 150க்கும் அதிகமான பங்குகள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது.ஒரு கிராம் தங்கம் 20 ரூபாய் விலை குறைந்து 5 அயிரத்து 605 ரூபாயாக விற்கப்பட்டது.வெள்ளி விலையும் கிராமுக்கு 30 காசுகள் குறைந்து 76 ரூபாய் 20 காசுகளாக விற்பனையானது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 76 ஆயிரத்து200 ரூபாய்க்கு விற்பனையானது. தங்கம் விலையுடன் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மற்றும் செய்கூலி சேதாரம் சேர்த்தால் மட்டுமே முழுமையான விலை தெரியவரும், ஆனால் கடைக்கு கடை செய்கூலி சேதாரம் மாறுபடும்,குறைவான செய்கூலி சேதாரம் உள்ள கடைகளை தேர்ந்தெடுத்து தங்கம் வாங்குவது சிறந்த யோசனையாகும்.