சம்பளத்தை கேட்டா ஆடி போயிடுவீங்க ஆடி!!!!…
சார்க் என்ற நாடுகளின் அமைப்பு சார்பில் தெற்கு டெல்லியில் மைதான் கர்ஹி என்ற இடத்தில் தெற்காசிய பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் அண்மையில் பிஎச்டி படித்தவர்கள் ஆராயாச்சி உதவியாளர்களாக வேலை செய்ய அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த வேலை பார்ட் டைம்தான் என்ற போதிலும் இதற்கு மாதம் சம்பளமாக வெறும் 8 ஆயிரம் ரூபாய் தரப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கும் ஆயிரத்து எட்டு தகுதிகளையும் அந்த பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. அதாவது 55 விழுக்காடு மதிப்பெண் வேண்டுமாம், பிஎச்டி படித்திருக்க வேண்டுமாம், ஆனால் சம்பளம் மட்டும் 8 ஆயிரம் ரூபாய்தான் தருவார்களாம். இந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில மணி நேரத்தில் சமூக வலைதளங்களில் உரிமைக்குரல் பலரும் எழுப்பியுள்ளனர். டெல்லி மாதிரியான ஒரு பெருநகரத்தில் வெறும் 8 ஆயிரம் ரூபாய் எப்படி பத்தும் இது உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்று பலரும் சரமாரியாக திட்டத் தொடங்கிவிட்டனர். இந்தியர்களை கொஞ்சம் மரியாதையுடன் நடத்துங்கள் என்றெல்லாம் பலரும் தங்கள் கண்டனங்களை பதிவிடத் தொடங்கினர். இந்த விவகாரம் இணையத்தில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலும் என்ற தலைப்பிலான ஆராய்ச்சி கட்டுரைக்கு வேலை செய்வதற்கு எத்தனை வேலை இருக்கும் தெரியுமா அதற்கு நீங்கள் தரும் சம்பளம் இத்தனை குறைவாக இருக்கிறதே என்று பலரும் தங்கள் ஆதங்கங்களை கொட்டித்தீர்த்துள்ளனர். நடுத்தர மக்களை இழுவாக நினைத்து இந்த வகை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதற்கு யாரும் விண்ணப்பிக்க வேண்டாம் என்றும் பலரும் தங்கள் கோபங்களை கொட்டித் தள்ளியுள்ளனர். பட்டம் படித்தவர்களுக்கே குறைந்தபட்சம் 22,744 ரூபாய் இருக்கவேண்டும் என்ற விதி எப்படி மீறப்பட்டுள்ளது என்றும் சிலர் புள்ளி விவரங்களோடு போட்டுதாக்கியுள்ளனர். ஆராய்ச்சி உதவியாளரின் சம்பளமே ஆராய்ச்சி செய்யவேண்டியுள்ளது என்பதே நிஜமான சூழலாக கருதப்படுகிறது.