1 டிரில்லியனப்பே…!!
அடுத்த சில ஆண்டுகளில் உலகத்தை ஆளப்போவது செயற்கை நுண்ணறிவு என்ற தொழில்நுட்பம்தான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இந்த துறை அசுர வேகத்தில் வளர்ந்து வருவதால் இதற்கான கணினிகள்,சிப்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இந்த வரிசையில் பிரபல சிப் தயாரிப்பு நிறுவனமான Nvidiaவில் முதலீடுள் குவிந்து வருகின்றன.8 மாதங்களுக்குள் இந்த நிறுவனத்தின் முதலீடுகள் மும்மடங்காக உயர்ந்திருக்கிறது. குறிப்பிட்ட இந்த நிறுவனத்தின் வளர்ச்சி என்பது 200 % ஆக உயர்ந்திருக்கிறது. இந்த மதிப்பு வரும்காலங்களில் மேலும் உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 401 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக NVIDIAநிறுவன பங்குகளின் மதிப்பு மட்டும் 1 டிரில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. இதுவரை அமெரிக்க வரலாற்றில் ஆப்பிள், கூகுள்,மைக்ரோசாஃப்ட்,அமேசான் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட நிறுவனங்களாக இருந்து வந்தன. இந்த நிலையில் இந்த கிளப்பில் தற்போது NVIDIAநிறுவனமும் இணைந்துள்ளது. இதே துறையில் உள்ள குவால்காம்,இண்டெல் நிறுவனங்களைவிடவும் NVIDIA வின் மதிப்பு அதிகம் என்கிறது அமெரிக்க புள்ளி விவரம். மற்ற நிறுவனங்களின் கிராபிக்ஸ் செயலாக்கத்தை விட குறிப்பிட்ட என்விடியா நிறுவன ஜிபியுகளின் பங்களிப்பே செயற்கை நுண்ணறிவு நுட்பத்தில் 80 விழுக்காடு பங்களிப்பை பெறுவதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இணையம் சார்ந்த வீடியோகேம்களில் உள்ள கிராபிக்ஸ் நுட்பங்களும் NVIDIA நிறுவனத்தில் சிறப்பாக இருக்கும் என்பதால் இதில் அதிக முதலீடுகள் குவிகின்றன. கடந்த ஒரே வாரத்தில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 25% உயர்ந்துள்ளது.