மீண்டும் ஒன்றரை லட்சம் கோடி வசூல்!!!
கடந்த மே மாதம் மட்டும் மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி என்ற சரக்கு மற்றும் சேவை வரியாக ஒருலட்சத்து 57 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. கடந்த ஏப்ரல் மாத ஜிஎஸ்டி 1லட்சத்து 87 ஆயிரம் கோடி ரூபாய் வசூலான நிலையில் தற்போது அது 30 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்திருக்கிறது. தொடர்ந்து 15ஆவது முறையாக ஜிஎஸ்டி வரி வசூல் என்பது 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக கிடைத்திருக்கிறது. கடந்தாண்டு மேமாத வருவாயைவிட இந்த ஜிஎஸ்டி வசூல் என்பது 12 விழுக்காடு அதிகமாகும். கடந்தமாதம் சரியாக சொல்லவேண்டுமானால் 1லட்சத்து 57 ஆயிரத்து90 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி 28,411 கோடி ரூபாயும்,மாநில ஜிஎஸ்டியாக35,828 கோடிரூபாயும் வசூலாகி இருக்கிறது.ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக 81ஆயிரத்து363 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.வெளிநாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்யப்படும்போது கிடைக்கும் செஸ் வரி ஒரு 11,489 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. மாநிலங்கள் மற்றும் மத்திய அரசுகளுக்கு அளித்தது போக, மொத்த ஜிஎஸ்டியாக மத்திய அரசாங்கத்துக்கு 63,780 கோடியும், மாநில அரசுக்கு 65,597 கோடி ரூபாயும் வரியாக கிடைத்திருக்கிறது. நடப்பாண்டிலும் ஜிஎஸ்டியின் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியானது 12 விழுக்காடு இருக்கும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.