சமநிலையில் முடிந்த சந்தைகள்
இந்திய பங்குச்சந்தைகள் ஜூன் 6ஆம் தேதி சமநிலையில் முடிந்தன. இந்திய பங்குச்சந்தைகளில் பெரிய அளவில் ஊசலாட்டம் இருந்து வந்தது.வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 5 புள்ளிகள் உயர்ந்து 62792 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டியும் 5 புள்ளிகள் உயர்ந்து 18,599 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தன. தொடக்கம் முதலே சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தைகள் கடைசி ஒரு மணி நேரம் சந்தையை மீட்டது. UltraTech Cement, Divis Laboratories, Kotak Mahindra Bank, Grasim Industries ஆகிய நிறுவன பங்குகள் லாபத்தை பதிவு செய்தன.Tech Mahindra, Infosys, TCS, ONGC நிறுவன பங்குகள் சரிந்தன. ஆட்டோமொபைல் மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் 1 விழுக்காடு உயர்ந்தன.தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் ஒன்றரை விழுக்காடு சரிந்தன.
Tata Motors, TVS Motor, Ajanta Pharma, Bajaj Auto, Axis Bank உள்ளிட்ட பங்குகள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு ஏற்றத்தை கண்டன. சென்னையில் ஒரு கிராம் தங்கம் 30 ரூபாய் அதிகரித்து 5 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் ஒரு சவரன் 44 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து 78 ரூபாயாக விற்பனையாகிறது. கட்டிவெள்ளி விலை கிலோவுக்கு 300 ரூபாய் அதிகரித்து 78 ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது.இந்த விலையுடன் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மற்றும் செய்கூலி சேர்ந்தால்தான் உண்மையான தங்கம்விலை வரும். ஆனால் செய்கூலி ,சேதாரம் கடைக்கு கடை மாறுபடும் என்பதால், எந்த கடையில் குறைவாக இருக்குமோ அங்கு தரமான தங்கத்தை சரியாக பார்த்து வாங்குவதே புத்திசாலித்தனம். நண்பன் கூட உதவாத நேரத்தில் தங்கம் உதவும், இயன்றவரை தங்கத்தை சேமித்து வையுங்கள் ஆபரணங்களாக அல்ல டிஜிட்டலாக..