களம் இறங்கும் ஹோண்டா !!!
ஹோண்டா கார் நிறுவனம் இந்தியர்களுக்கு மிகவும் நெருக்கமான கார் என்றே சொல்லலாம், சென்னை மாதிரியான பெரிய நகரங்களில் சாலையில் செல்லும் 10 வாகனங்களில் குறைந்தபட்சம் இரண்டு கார்களாவது ஹோண்டா கார்களாக இருக்கின்றன. இந்தளவுக்கு பிரபலமாக உள்ள இந்த கார்கள் வரும் 2030ஆம் ஆண்டுக்குள் ஐந்து புதிய கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர். இந்த வகையில் ஹோண்டா எலிவேட் என்ற கார் இந்தியாவில் ஜூன் 6ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. LED விளக்குகள் முன்பக்கமும்,பின்பக்கம் மற்றும் கருப்பு நிற ஃபாக் லாம்ப் பெரிய வீல் ஆர்ச்கள் இந்த காரின் சிறப்பம்சங்களாக உள்ளன. 4,312 mm நீளம், 1,790 mm அகலம், 1,650 mm உயரம் கொண்டதாக இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 1.5லிட்டர் DOHC i-VTEC பெட்ரோல் இன்ஜின் இந்த கார்களில் உள்ளன.121Ps ஆற்றல் மற்றும் 145.1 Nm torque இந்த காரின் பிரத்யேக அம்சமாகும். இந்த காரில் 6 கியர்களும் மேனுவலாக போடும் வகையில்தான் வடிவமைப்பு உள்ளது. மேம்படுத்தப்பட்ட சிவிடி வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை குறித்த அறிவிப்புகள் ஏதும் உடனடியாக வெளியாகவில்லை . வெளியானதும் நாங்கள் உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.