விரைவில் குறைகிறதா பெட்ரோல், டீசல் விலை?
கொரோனா காலகட்டத்திலும், ரஷ்யா-உக்ரைன் போர் காலகட்டத்திலும் இந்திய எண்ணெய் இறக்குமதி நிறுவனங்கள் பெரிய பாதிப்புகளை சந்தித்தன. ஒரு லிட்டர் பெட்ரோல் 111 ரூபாய் வரை விற்கப்பட்டது. திடீரென உயர்ந்த பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் மக்கள் திக்கு முக்காடி போயினர். இதனை கருத்தில் கொண்டு ஒரே நாட்டிடம் இருந்து மட்டும் கச்சா எண்ணெயை வாங்காமல் , எங்கு மலிவாக கிடைக்குமோ அந்த இடங்களில் இந்தியா கச்சா எண்ணெயை வாங்கி குவித்து வருகிறது. விலை உச்சகட்டத்தில் இருந்தபோது இந்திய அரசு எண்ணெய் சுத்தீகரிப்பு நிறுவனங்களுக்கு பெரிய பாதிப்புகள் ஏற்பட்டன. கிட்டத்தட்ட கடன் உச்சகட்டத்தில் இருந்தன. அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளால் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மலிவு விலைக்கு கச்சா எண்ணெய் கிடைத்து வருகிறது. நிலைமை இப்படி இருக்கையில், எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்களுக்கு தற்போது நல்ல லாபம் கிடைத்து வருகின்றன. கொரோனா காலத்தில் ஏற்பட்ட நஷ்டமும் அடைந்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. போதுமான அளவுக்கு பணம் வந்துவிட்டதால் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இந்த பலன்களை மக்களுக்கு தர விரும்புதாக கூறப்படுகிறது. இதனை ஏற்றுக் கொண்டுள்ள அரசாங்கமும், பெட்ரோல்,டீசல் விலையை இன்னும் குறைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான அறிவிப்புகள் விரைவில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே விலைவாசி உயர்வால் விழிபிதுங்கி நிற்கும் நடுத்தர மக்களுக்கு இந்த பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு என்பது சற்று நிம்மதியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களுக்குள் வெளியாக இருப்பதாக நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது.