காஸ்ட்லி நகரம் மும்பைதான்….
ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு சென்று சில காலங்கள் தங்கி வேலைசெய்வோரை ஆங்கிலத்தில் எக்ஸபாட்ஸ் என்பார்கள். இப்படி செல்லும் எக்ஸ்பாட்ஸ் வாடகை, பிற செலவுகள் என்று அதிக தொகையை செலவழிக்க நேரிடுகிறது. இந்த நிலையில் இந்தியாவில் மிகவும் அதிக காஸ்ட்லியான , அதாவது அதிகம் செலவு ஏற்படும் நகரங்கள் பட்டியல் அண்மையில் வெளியாகியிருக்கிறது. இதில் மும்பைக்கு முதலிடம் கிடைத்திருக்கிறது இதற்கு அடுத்த இடத்தில் டெல்லியும்,3ஆவது இடத்தில் பெங்களூருவும் இருக்கிறது. மெர்சர் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்திருக்கிறது. மும்பையில் வசிக்கத் தேவையான பணத்தில் பாதிக்கும் குறைவான பணம் இருந்தாலே சென்னை,ஐதராபாத்,கொல்கத்தா, புனேவில் தங்கிவிடலாம் என்கிறது அந்த புள்ளி விவரம். கொஞ்சம் காசு இருந்தாலே போதும்,அழகாய் வாழ்க்கையை ஓட்டிவிடலாம் என்ற நகரங்கள் பட்டியலில் கொல்கத்தாவுக்கு முதலிடம் கிடைத்திருக்கிறது. 5 கண்டங்களில் 227 நகரங்களில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் மும்பை ,டெல்லிநகரங்கள் மிகவும் காஸ்ட்லியான நகரங்களாக ஆசியஅளவில் 35 இடங்களில் இடம்பிடித்திருக்கின்றன. உணவு,போக்குவரத்து,துணிகளின் விலை உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு இந்த ஆய்வறிக்கை தயாராகியுள்ளது. மும்பையில் மட்டும் 2022-இல் இருந்ததை விட தற்போது வாடை 15 விழுக்காடு உயர்ந்திருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. பெங்களூரு,சென்னை,புனே ஆகிய நகரங்களில் வாடகை அதிகபட்சமே 7விழுக்காடு அளவு மட்டும்தான் உயர்ந்திருக்கிறது என்கிறது அந்த புள்ளி விவரம் ஐதராபாத்,கொல்கத்தாவில் வெறும் 3 விழுக்காடு அளவுக்குத்தான் விலையேற்றம் கண்டிருப்பதாக கூறுகிறது ஆய்வறிக்கை.