டெஸ்லா ரசிகர்களுக்கு உற்சாக செய்தி
டெஸ்லா நிறுவனத்தின் கார்கள் உலகளவில் அமோக வரவேற்பை பெற்றுள்ளன. இந்த நிலையில் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது கிளையை தொடங்க பலகட்ட முயற்சிகளை செய்து வருகின்றனர். இதற்காக ஒரு டெஸ்லா குழு அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்து மத்திய அரசு அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளனர். தற்போது வரை அமெரிக்காவுக்கு வெளியே சீனாவில்தான் மிகப்பெரிய ஆலையை டெஸ்லா நிறுவனம் வைத்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் வென்டார்களை வைத்துக்கொள்ள டெஸ்லா விரும்புவதாகவும் இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவா,சீனாவா எங்கு அதிக முதலீடுகளை குவிப்பது என்று மஸ்குக்கே குழப்பம் நேரிட்டிருக்கும் அளவுக்கு பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. இந்த நிலையில் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைக்கு பதிலாக படிப்படியான உற்பத்தி திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. தற்போது ஆப்பிள்,சாம்சங்க் மாதிரியான நிறுவனங்களுக்கு இந்தியாவில் என்ன சலுகையோ அதி பாணியிலான சலுகைகளைத்தான் டெஸ்லாவுக்கும் அளிக்க மத்திய அரசுதிட்டமிட்டு இருக்கிறது. இந்தியாவில் அசம்பிள் செய்வதற்காகவெல்லாம் மானியம் தரமுடியாது என்று முரண்டுபிடிக்கும் மத்திய அரசு, PLI திட்டத்தை தர முடியாது என்றும் திட்டவட்டமாக கூறியிருக்கிறது. மின்சார கார்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் இந்தியாவில் 40,000டாலருக்கு மேல் உள்ள கார்களுக்கு 100 விழுக்காடு வரி விதிக்கும் முறை உள்ளதாகவும், இதுபோக இறக்குமதி வரி மட்டும் 60 விழுக்காடாக இருக்கும் என்றும் மத்திய அரசு கூறியிருக்கிறது. ஆனால் 60 வேண்டாம் 40விழுக்காடு வேண்டுமானால் வரியை குறைக்க வேண்டும் என்றும் டெஸ்லா நிறுவனம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.எனினும் வெண்டர்களின் ஆலைகள் எங்கு அமைய இருக்கின்றன என்ற எந்த தகவலும் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.