யார் இந்த அலெக்சாண்டர் சோரோஸ்?
ஹங்கேரியில் பிறந்து தற்போது அமெரிக்காவில் உள்ள பிரபல முதலீட்டாளர் ஜார்ஜ் சோரோஸ் என்பவருக்கு தற்போது 92 வயதாகிறது. ஆரம்ப காலகட்டத்திலேயே முதலீடுகளில் அதிக கவனம் செலுத்திய சோரோஸ், தான் சேர்த்து வைத்த 25 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பணத்தை தற்போது அவரின் மகன் அலெக்சாண்டர் சோரோஸுக்கு அளிக்க இருக்கிறார். 1992ஆம் ஆண்டு முதல் தாம் சேர்த்த பணத்தை நல்ல காரியங்களுக்காக ஜார்ஜ் பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது அவரின் மகனும் தந்தையின் பணிகளுக்கு உதவிசெய்து வருகிறார். 37 வயதாகும் அலெக்சாண்டர் பெரிய பணத்தை அரசியலிலும் செலவழிக்க விரும்புகிறார். அரசியல் ரீதியில் மிகவும் ஏழை மக்களுக்கு பணத்தை செலவிட விரும்புவதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார். 3 முறை திருமணம்செய்துகொண்டு 5 குழந்தைகளை கொண்டுள்ள அலெக்சாண்டர் சோரோஸ். அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் 2009இல் பட்டம் பெற்றார்.2018ஆம் ஆண்டில் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர் ஆவார். யூத குழந்தைகளின் படிப்புக்காக 2012 இல் சுமார் 2 லட்சம் டாலர் பணத்தை அவர் தானமாக கொடுத்து கவனம் ஈர்த்தார். ஆண்டுதோறும் மனித உரிமைகள் சார்ந்த நிகழ்வுகளுக்கும் அலெக்சாண்டர் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஆண்டுதோறும் அளித்து வருகிறார்.