திராமில் வர்த்தகம் சீக்கிரம் பார்ப்பீங்க…
இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக நல்லுறவு உள்ளது. இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரக் வர்த்தக அமைச்சர் தனி பின் அகமது அல் ஜியோதி மற்றும் அந்நாட்டு அதிகாரிகள் இந்தியாவுக்கு வந்துள்ளனர். அவர்கள் டெல்லியில் சந்தித்து பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த இந்திய அமைச்சர் பியூஷ் கோயல் பெட்ரோலியம் இல்லாமல் 2030ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர் வர்த்தகம் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறினார். தற்போது இந்த வர்த்தகம் வெறும் 48 பில்லியன் டாலராக உள்ளது.இருநாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக இருக்கின்றன. இந்த நிலையில் இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் அமெரிக்க டாலருக்கு பதிலாக ரூபாய் மற்றும் திராமில் நடக்க இருப்பதாகவும்,அதற்கான பணிகள் விரைவில் நடக்க இருப்பதாகவும் அமைச்சர்பியூஷ் கோயல் தெரிவித்தார். பெட்ரோலியம் மட்டுமின்றி, மகளிர் மேம்பாடு,சுயதொழில் வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளுக்கும் இடையே விரிவான ஆலோசனை நடப்பதாக கூறினார். தற்போது உள்ளதை விட அதிகளவில் கச்சா எண்ணெய் சார்ந்த பொருட்கள் அரபு அமீரகத்திடம் இருந்து இறக்குமதி செய்யவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறினார்.