தேவையற்ற அழைப்புகள் – ரிசர்வ் வங்கி சொல்வது என்ன?
பஜாஜ் பின்சர்வ் நிறுவனத்தின் சிஇஓ அண்மையில் பேசும்போது,விரைவில் செல்போன்களுக்கு வரும் தேவையற்ற அழைப்புகளை தடுக்கும் புதிய வசதி அறிமுகமாக இருப்பதாக கூறினார். இது பற்றி ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்துள்ள எம்.கே.ஜெயின், இந்த விவகாரத்தில் தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய்தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் இந்த விவகாரம் குறித்து தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகளும் ஆலோசித்து வருவதாகவும் ஜெயின் கூறினார். தேவையில்லாத அழைப்புகளை முறைப்படுத்துவது குறித்து ரிசர்வ் வங்கி ஒரு குழு அமைத்துள்ளதாகவும், அந்த குழுவின் பரிந்துரையின்பேரிலேயே ஒரு சட்ட முன்வடிவ விதிகளை இறுதி செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் ,போதுமான நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் எம்.கே. ஜெயின் கூறியுள்ளார். இப்படி ஒவ்வொரு நிறுவனமும் முன்வரும்பட்சத்தில் மக்கள் தேவையில்லாத தொல்லையில் இருந்து விடுபடுவார்கள் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.