பில்கேட்சை மிஞ்சிய பிரபலம்..யாரு அவரு.???
உலக பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் பல தசாப்தங்களாக இருந்து வருபவர் பில்கேட்ஸ்.மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் உரிமையாளரான அவர்,உலகின் 4ஆவது பெரிய பணக்காரராக இப்போதும் தொடர்ந்து வந்தார். இந்த சூழ்நிலையில்தான் ஆரக்கள் நிறுவனத்தின் உரிமையாளரான லாரி எலிசன் பில்கேட்சை மிஞ்சியுள்ளார். புளும்பர்க் நிறுவனம் அவ்வப்போது வெளியிடப்படும் உலக பணக்கார்கள் பட்டியலில் இந்த முறை பில்கேட்ஸ் 5ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். புளூம்பர்க் நிறுவன அறிக்கையின்படி பில்கேட்ஸின் சொத்துமதிப்பு 129.1 பில்லியன் டாலர் என்றும்,எல்லிசனின் சொத்து மதிப்பு 129.8பில்லியன் டாலர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வரலாற்றிலேயே முதன் முறையாக பில்கேட்ஸை எல்லிசன் மிஞ்சியுள்ளார்.2014ஆம் ஆண்டே சிஇஓ பதவியை எல்லிசன் ராஜினாமா செய்துவிட்டு தலைவர் பதவியை மட்டும் வைத்திருந்தார். ஆரக்கள் நிறுவனத்தின் பங்குச்சந்தை மதிப்பு 46 விழுக்காடு அதிகரித்துள்ள சூழலில் ஒரு பங்கின் விலை 116.50 டாலராக உயர்ந்துள்ளது. 2023 நிதியாண்டில் மட்டும் அந்த நிறுவனம் 50 பில்லியன் டாலர் லாபம் பார்த்துள்ளது.வலுவான கிளவுடு தொழில்நுட்பத்தால் அந்த நிறுவனத்துக்கு வருவாய் அதிகளவில் கொட்டி வருகிறது. ஓபன் ஏஐ நுட்பத்துக்கு போட்டியாக கோஹெர் என்ற செயற்கை நுண்ணறிவு உபகரணத்தை ஆரக்கிள் நிறுவனம் வடிவமைத்து வருகிறது.இதற்கு சந்தையில் பெரிய முதலீடுகளும் கிடைத்து வருகின்றன.இதுவரை 270 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடுகள் இந்த நிறுவனத்துக்கு கிடைத்துள்ளன. அந்த நிறுவனத்தில் தனிநபராக 42 விழுக்காடு பங்குகளை எல்லிசன் கொண்டுள்ளார். இந்த நிறுவனத்தின் ஒன்றரை விழுக்காடு முதலீடு டெஸ்லா நிறுவனத்தில் செய்யப்பட்டுள்ளது.