2,3 மாசத்துக்கு வாய்ப்பில்ல ராஜா..!!!
ஜே.பி. மார்கன் என்ற நிறுவனம் இந்தியா மட்டுமின்றி உலகளவில் பல புள்ளிவிவரங்களை கச்சிதமாக அலசி ஆலோசனை செய்வதில் பிஸ்தான நிறுவனமாகும். இந்த நிறுவனம் அண்மையில் இந்தியா பற்றி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து, அதனை தூய்மை படுத்தி, பின்னர் அதை பெட்ரோல்,டீசலாக விற்று வருகிறது. இந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று சமயத்தில் இந்திய எண்ணெய் சுத்தீகரிப்பு நிறுவனங்கள் பெரிய நஷ்டங்களை சந்தித்து இருந்தன. இந்த சூழலில் கச்சா எண்ணெய் சுத்தீகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பு தற்போது மெல்ல மெல்ல மீண்டு வருவதால் இந்திய நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கொரோனாவுக்கு முன்பே இந்திய பெட்ரோலிய சுத்தீகரிப்பு நிறுவனங்கள் பெரிய இழப்புகளை சந்தித்து இருந்ததும். தற்போது கிடைத்து வரும் வருவாயை வைத்து பழைய கடன்களை அடைத்து வருவதாகவும் ஜே.பி. மார்கன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 80 டாலருக்கும் குறைவாக இருந்தால் மட்டுமே இந்திய சுத்தீகரிப்பு நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்கும் என்றும், அது நடைபெற இன்னும் 2,3 மாதங்கள் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே அடுத்த 2,3 மாதங்களில் இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலை குறைய வாய்ப்பில்லை என்றும் ஜே.பி.மார்கன் நிறுவனம் கூறியுள்ளது. 2024 முதல் காலாண்டில் நிலைமை சரியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.