இந்திய உள்கட்டமைப்பை வலுவாக்கும் அமெரிக்கா!!!
ஒரு தேசத்தின் உள்கட்டமைப்பு என்பது இன்றியமையாத ஒன்றாகும்.இந்நிலையில் இந்தியாவில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக அமெரிக்க நிதியமைச்சர் ஜானட் எல்லன் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து ஒரு புதிய தொழில்நுட்பம் வந்தால் அதை குறைவான விலைக்கு சந்தைப்படுத்த முடியும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்தவாரம் அமெரிக்கா செல்ல இருக்கிறார். இதற்கு முன்பாக அமெரிக்க நிதியமைச்சர் இப்படி பேசியிருப்பது பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா என்பது அமெரிக்காவின் நம்பகமான பங்காளர் என்றும், இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து உலக சந்தையில் புதிய மாற்றங்களை செய்ய இருப்பதாகவும் அமெரிக்க நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்தியாவில் உள்கட்டமைப்புகளில் இடைவெளி உள்ளதாக கூறியுள்ள ஜானட் இதனை குறைக்க போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றும் நம்பிக்கை அளித்துள்ளார்.