புதிய பேட்டரி தொழில்நுட்பத்தை கையில் எடுக்கும் டொயோடா
எத்தனையோ பெரிய பெரிய கார்கள் வந்தாலும் டொயோடா மாதிரியான பெரிய பெரிய கார் நிறுவனங்களுக்கு எப்போதும் மதிப்பு இருக்கத்தான் செய்கிறது.இந்த நிலையில் தனது மின்சார கார்களின் மாடல்களுக்கு புதிய பேட்டரி நுட்பங்களை கையாள இருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. சாலிட் செல் வகை பேட்டரிகளை தயாரிக்க இருப்பதாக அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய வகை பேட்டரிகள் வரும் 2026ஆம் ஆண்டு முதல் உற்பத்தி தொடங்கப்பட இருக்கிறது. இந்த புதிய ரக பேட்டரிகள் குறைவான நேரத்தில் அதிக சார்ஜ் ஏறும் வகையிலும்,சார்ஜ் போட்டால் அதிக தூரம் பயணிக்கும் வகையில் தயாராகி வருகின்றன. 2027-28 காலகட்டங்களில் இந்த பேட்டரிகள் சந்தையில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது வரை டெஸ்லா நிறுவனத்தின் கார்கள்தான் ஒரு முறை சார்ஜ் செய்தால் 530 கிலோமீட்டர் தூரம் செல்கின்றன. ஆனால் அதனைவிட இருமடங்காக அதாவது ஒரு முறைசார்ஜ் செய்தால் 1000 கிலோமீட்டர் செல்லும் பேட்டரி கார்களை டொயோடா தயாரிக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. பேட்டரியில் இயங்கும் மின்சார கார்கள் உற்பத்திக்காக பெரிய தொகையை முதலீடு செய்துள்ள டொயோடா 2030-ல் 17 லட்சம் பேட்டரி கார்களை தயாரிக்கும் வகையில் பெரிய ஆலையையும் தயாரித்து வருகிறது.தற்போது வரை லெக்சஸ் வகை மின்சார கார்களைத்தான் டொயோடா நிறுவனம் 8,584 வாகனங்களை விற்றுள்ளது.இந்த எண்ணிக்கை என்பது உலகளவில் 1 விழுக்காடுக்கும் குறைவாக இருக்கிறது.